யாழ். பல்கலைகழக வவுனியா வளாகம் வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்வு

Jaffna Vavuniya University University of Vavuniya
By Independent Writer Jun 09, 2021 11:17 AM GMT
Report

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகம் இலங்கை வவுனியா பல்கலைக்கழகமென அதிவிஷேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி. எல் பீரீஸ் அவர்களின் கையொப்பத்துடன் நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகம் என்ற பெயர் எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதியுடன் நீக்கப்பட்டு ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வவுனியா பல்கலைக்கழகமென தரமுயர்த்தப்படுவதானது எமது தொடர் முயற்சிக்கு கிடைத்த அளப்பரிய வெற்றியாகும்.

யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தை நாம் வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கு ஜனாதிபதி, பிரதமர் மற்றும் உயர் கல்வியமைச்சர்கள் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு, யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் டாக்டர். மங்களேஸ்வரன் ஆகியோருடன் இது தொடர்பாக முயற்சிகள் செய்து வந்தோம். இது இன்று எமக்கு வெற்றியளித்துள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மஸ்தான் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாகத்தை வவுனியா பல்கலைக்கழகமாக தரமுயர்த்த வேண்டுமெனும் தூரநோக்கோடு செயற்பட்ட போது எனது தொடர் முயற்சிக்கு பக்கபலமாக இருந்த அத்தனை நல் உள்ளங்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன்.

எமது நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர், உறுதுணையாக இருந்த உயர் கல்வி அமைச்சர்கள் மற்றும் யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக முதல்வர் டாக்டர். மங்களேஸ்வரன் உட்பட வளாகத்தின் அனைத்து தரப்பினருக்கும் விஷேடமாக எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் ஆகஸ்ட் முதலாம் திகதிக்கு பின்னர் வவுனியா பல்கலைக்கழகமானது தெரிவு செய்யப்பட்ட கற்கை நெறிகளில் விஷேடத்துவத்தை அபிவிருத்தி செய்யும் இயல்திறனுடன் திடமான ஒரு அடிப்படையை கொண்ட கல்வியை மாணவர்களுக்கு வழங்கும் தூரநோக்குடன் பரந்தளவிலான தொடர்புபட்ட கற்கைகளுடன் சம்பந்தப்பட்ட கற்கைநெறிகளை இந்த பல்கலைக்கழகம் தமது தூரநோக்காக கொண்டு செயற்பட வேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் மேலும் தெரிவித்தார்.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

சரவணை, கோண்டாவில் மேற்கு

14 Sep, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, ஆனைக்கோட்டை, Frankfurt, Germany

14 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
நன்றி நவிலல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

மீசாலை, Toronto, Canada

17 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Epsom, United Kingdom

18 Aug, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, கனடா, Canada

15 Sep, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US