முடிவுக்கு வந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் உணவுத்தவிர்ப்பு போராட்டம்
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இரண்டு நாட்களாக முன்னெடுத்து வந்த உணவுத்தவிர்ப்பு போராட்டமானது நேற்றையதினம்(25.01.2025) முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
விதிகளுக்குப் புறம்பாக நடைபெறும், நடைபெற்ற மாணவர்கள் மீதான விசாரணைகளை உடன் நிறுத்து, போராடுதல், கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் உள்ளிட்ட மாணவர்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய், விரிவுரையாளர்கள் மீதான முறைகேடுகளையும் பாரபட்சமின்றி விசாரணை செய், மாணவர்களின் கற்றலிற்கான சுதந்திரத்தை உறுதி செய்து மாணவர்களிற்கு உடனடி நிவாரணம் வழங்கு ஆகிய நான்கு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தீர்வு கிடைக்கும் வரை உணவுத்தவிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் ஈடுபட்டு வந்தனர்.
போராட்டம் முடிவு
இந்நிலையில், அந்த பிரச்சினைகள் குறித்த தீர்வு வழங்குவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக பேரவையினர் உறுதியளித்துள்ளனர்.
இதனையடுத்தே, குறித்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த வாரம் ஓடிடி-யில் ரிலீஸாகும் எதிர்பார்ப்புக்குரிய இரண்டு படங்கள்.. Week end என்ஜாய் பண்ணுங்க Cineulagam

சொகுசு கார் முதல் பல ஆயிரம் டொலர் சம்பளம் வரை! போப் பிரான்சிஸ் செய்த நெகிழ்ச்சி செயல்கள் News Lankasri
