சம்பூரில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது
திருகோணமலை சம்பூர்(Sampur)- நல்லூர் பகுதியில் அனுமதி பத்திரம் இன்றி அரச பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு ரிப்பர் வாகனங்கள் மற்றும் பெக்கோ இயந்திரத்தையும் பொலிஸார் இன்று(25) அதிகாலை கைப்பற்றியுள்ளனர்.
அத்தோடு, இதன் சாரதிகள் மூவரையும் கைது செய்துள்ளதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இருவர் கைது
அனுமதிப்பத்திரம் இல்லாமல் அரச பகுதியில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெறுவதாக சம்பூர் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களையும் திங்கட்கிழமை மூதூர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சம்பூர் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |