நீதிப் பொறிமுறையின் சுயாதீனத் தன்மை அற்ற நிலை மீண்டும் வெளிப்பட்டுள்ளது: யாழ். பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
நீதித்துறை உள்ளிட்ட அரச நிறுவனங்கள் அனைத்தும், சுயாதீனமாக இயங்க காத்திரமான செயற்பாட்டினை முன்னெடுத்து, இலங்கையினை முன்னோக்கி பயணிக்க உதவிட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
நீதித்துறை மீதான அச்சுறுத்தல்களும், சுயாதீனமற்ற அரச இயந்திரமும் எனும் தலைப்பில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
நீதிப் பொறிமுறையின் சுயாதீனத் தன்மை
'' யாருக்கும் அடிபணியாமல் நீதி வழுவாது தீர்ப்புக்களை வழங்கிய முல்லைத்தீவு நீதிபதி சரவணராஜா அரசியல் அழுத்தங்களாலும் உயிர் அச்சுறுத்தல் காரணமாகவும் மன அழுத்தத்திற்கு உள்ளாகிவிரக்தியினால் பதவி விலகி நாட்டைவிட்டு வெளியேறி உள்ளமை அனைவர் மத்தியிலும் அதிர்வலைகளை உள்ளாக்கியுள்ளது.
இந் நிகழ்வு இலங்கையின் நீதிப் பொறிமுறையின் சுயாதீனத் தன்மை அற்ற நிலையை மீண்டும் ஒரு தடவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
நீதித்துறையைச் சார்ந்த நீதிபதி சரவணராஜா மட்டுமல்ல இலங்கை அரச இயந்திரத்தின் சகல துறைகளும் அரசினதும் பேரினவாத சக்திகளினதும் அரசியல் அழுத்தங்களுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாகின்றமை என்பது ஒரு புதிய விடயமல்ல'' தெரிவித்துள்ளது.


சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
