முல்லைத்தீவில் சட்டத்தரணிகளை அச்சுறுத்திய பொலிஸார் (Photos)
முல்லைத்தீவில் இடம்பெற்ற சட்டத்தரணிகளின் போராட்டத்தில் பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்கள் போராட்டக்காரர்களை அச்சுறுத்தும் விதமாக நடந்து கொண்ட தாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி ரீ.சரவணராஜாவிற்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வடக்கு மாகாண சட்டத்தரணிகளால் மாபெரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த ஆர்ப்பாட்ட பேரணி இன்று (03.10.2023) முல்லைத்தீவு நீதிமன்றம் முன்பாக நடைபெற்றது.

ஐ.நாவில் இடம்பிடித்த நீதிபதி இளஞ்செழியன்: பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம்(Video)
அச்சுறுத்தும் விதமாக புகைப்படங்கள்
நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்த பின்னணியில் அதற்காக போராடிய சட்டத்தரணிகளின் போராட்டத்திலும் பொலிஸார், புலனாய்வாளர்கள் வெளிப்படையாகவே அவர்களை அச்சுறுத்தும் விதமாக புகைப்படங்கள், வீடியோ எடுத்து அச்சுறுத்தல் விடுத்திருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் வடமாகாண சட்டத்தரணிகள் சங்கங்களை சேர்ந்த சட்டத்தரணிகளால் குறித்த ஆர்ப்பாட்ட பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

viral video: ரெட்டிகுலேட்டட் மலைப்பாம்புக்கு அருகில் அசால்ட்டாக சாக்லேட் சாப்பிடும் குழந்தை! Manithan

Siragadikka Aasai: சீதாவின் காதலரை நேருக்கு நேர் சந்தித்த முத்து... அடுத்து நடக்கப்போவது என்ன? Manithan
