யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர் சங்கமும் மாணவர் ஒன்றியமும் சந்திப்பு
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்திற்கும், மாணவர் ஒன்றியத்திற்கும் இடையிலான சிநேகபூர்வ கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது நேற்று முன்தினம்(12.01.2024) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
சிநேகபூர்வ சந்திப்பு
மேலும், ஊழியர் சங்கத் தலைவர் தங்கராஜா, இணைச் செயலாளர் த.சிவரூபன் உள்ளிட்ட பல்கலைக்கழக ஊழியர் சங்கப் பிரதிநிதிகளிற்கும், மாணவர் ஒன்றியத் தலைவர் கு.துவாரகன், செயலாளர் சோ.சிந்துஜன் உள்ளிட்ட மாணவர் ஒன்றியப் பிரதிநிதிகளிற்கும் இடையில் குறித்த சிநேகபூர்வ சந்திப்பு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |