நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத்தொகுதியில் வெளியாட்கள்: ஏற்பட்டுள்ள சிக்கல்
மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத்தொகுதியில் அதிகளவு வெளியாட்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய விசாரணையில் வெளியாகியுள்ளதாக நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறவினர்கள், பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், நண்பர்கள், நலன் விரும்பிகள், முன்னாள் எம்.பி.க்கள் என சுமார் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் இந்த குடியிருப்புகளில் இருப்பதாக தெரியவந்துள்ளது.
கொழும்பில் இருந்து வெகு தொலைவில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மாத்திரம் மாதிவெல நாடாளுமன்ற உறுப்பினர் குடியிருப்புகள் வழங்கப்படுவதுடன் இந்த வீடுகளை பராமரிக்க அரசாங்கம் வருடாந்தம் பல கோடி ரூபாவை செலவிடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வெளியாட்களை அகற்றுவதில் சிக்கல்
இதற்கிடையில், நாடாளுமன்ற உறுப்பினர்களின் உத்தியோகபூர்வ வீட்டுத்தொகுதியை நடத்துவதற்கான செலவும் இரட்டிப்பாகியுள்ளது.
இருப்பினும், வெளியாட்களுக்கு வீடுகள் வழங்கக்கூடாது என பல முறை அறிவித்தல் வழங்கப்பட்டும், வெளியாட்களை அகற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர் News Lankasri

எனது கல்விக் கட்டணம் இனப்படுகொலைக்கு செலவழிக்கப்படுகிறது: பட்டமளிப்பு விழாவில் குமுறிய மாணவி News Lankasri
