யாழ்.பல்கலைக்கழகத்தில் மூன்று பேருக்கு பேராசிரியர்களாக பதவி உயர்வு!
யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் மூவர் பேராசிரியர்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
இந்த நிகழ்வானது யாழ்.பல்கலைக்கழக பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் இன்று (20.05.2023) நடைப்பெற்றுள்ளது.
இதன்போது சிரேஷ்ட விரிவுரையாளர்கள் இருவர் பேராசிரியர்களாகவும், ஒருவர் இணைப் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.
பதவி உயர்வு
இதேவேளை பேராசிரியர் ஒருவர் துறைக்குரிய இருக்கை பேராசிரியராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கை நியமங்களுக்கு அமைய திறமை அடிப்படையில் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களின் மதிப்பீடு, நேர்முகத் தேர்வு முடிவுகள் இன்றைய பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
வணிக பீடத்தின் மனித வள முகாமைத்துவத் துறை
இதற்கமைய முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்தின் மனித வள முகாமைத்துவத் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர், கலாநிதி எஸ். எம். சி. மகேந்திரன் அலோசியஸ் மனித வள முகாமைத்துவத்தில் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறை
விஞ்ஞான பீடத்தின் இரசாயனவியல் துறைத் தலைவரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி பூ. ஐங்கரன் இரசாயனவியலில் பேராசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.
விவசாய பீடத்தின் விவசாயப் பொருளியல் துறை
விவசாய பீடத்தின் விவசாயப் பொருளியல் துறையைச் சேர்ந்த சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி கே. சூரியகுமார் விவசாயப் பொருளியலில் இணைப் பேராசிரியராகவும் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
வணிக பீடத்தின் மனித வள முகாமைத்துவத் துறை
இதேநேரம் முகாமைத்துவ கற்கைகள், வணிக பீடத்தில் மனித வள முகாமைத்துவத் துறையில் பேராசிரியரும் (Professor in Human Resource Management) , மனித வள முகாமைத்துவத் துறைத் தலைவருமான பேராசிரியர் என்.கெங்காதரன் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
