யாழ். பல்கலைக்கழக ஒழுக்காற்று உத்தியோகத்தர்களுக்கு எதிராக ஆணைக்குழுவில் முறைப்பாடு
யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த மாதம் 29 ஆம் திகதி விடுதி ஒன்றில் வைத்து முதலாமாண்டு மாணவர்களை அச்சுறுத்தும் வகையில் வலுக்கட்டாயமாகப் பொய் வாக்குமூலங்களில் கையொப்பம் இடுமாறு மாணவர் ஒழுக்காற்று உத்தியோகத்தர்களால் பணிக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், மாணவர்களின் சம்மதமின்றி காணொளி வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டமை தொடர்பில் உடனடியாக விசாரணை செய்து அறிக்கையிடுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிகப்பட்ட மாணவர்களுக்கு எதிரான பழிவாங்கல் நடவடிக்கைகளில் இருந்து அம் மாணவர்களைப் பாதுகாக்குமாறும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அறிவுறுத்தியிருப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு அறிவித்துள்ளது.
மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கை
யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளின் போது மாணவ ஒழுக்காற்று உத்தியோகத்தர்கள் பலகலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் ஒழுக்காற்று விதிகளை மீறி, தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கமைவாக நடந்து கொள்வதாகவும், இந்த விதி மீறல்கள் தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாகம் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொள்வதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் மூவர் மேற்கொண்ட முறைப்பாடுகள் பற்றி பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுடன் தொடர்பு கொண்டு வினவிய போதே இவ்வாறு தெரிவுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கும், அதனடிப்படையில் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் தேவையான அறிவுறுத்தல்களை மானியங்கள் ஆணைக்குழுத் தலைவர், யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு வழங்கியுள்ளதாக மானியங்கள் ஆணைக்குழுவின் பகடிவதைக்கு எதிரான விசாரணைப் பிரிவு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.





சகோதரி மகள்களைக் காப்பாற்ற அருவிக்குள் குதித்த இலங்கைத் தமிழருக்கு நேர்ந்த துயரம்: சமீபத்திய தகவல் News Lankasri

அரபு வர்த்தகர்களால் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்ட 450 ஆண்டுகள் பழமையான மரம்.., 40 பேர் தங்கலாம் News Lankasri

கொடூரமாக தாக்கிய குணசேகரன், ரத்தம் சொட்ட உயிருக்கு போராடும் ஈஸ்வரி.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

நிதிஷை, சுதாகர் எப்படி கொலை செய்தார், இனியா சிக்கியது எப்படி... பாக்கியலட்சுமி சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam
