பிரித்தானியாவில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரத்தின் கண்ணாடி உடைப்பு! இந்தியர் கைது
பிரித்தானியாவில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் மீது தாக்குதல் நடத்திய மற்றுமொரு இங்கிலாந்து வாழ் இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டன் பொலிஸாரின் நடவடிக்கையின் காரணமாக அங்கித் (வயது 41) என்ற இந்தியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள சுற்றுலா தலத்தில் கடந்த 22ம் திகதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர்.
26 பேர் உயிரிழப்பு
இந்த தாக்குதலில் இந்தியாவின் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலை தொடர்ந்து இந்தியா , பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் இந்தியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம்
இந்நிலையில் பிரித்தானிய தலைநகர் லண்டனில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம்முன் கடந்த சில நாட்களுக்குமுன் இங்கிலாந்து வாழ் இந்தியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம்மீது கல்வீச்சு தாக்குதல் நடைபெற்றது.
இந்த தாக்குதலில் தூதரகத்தின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
இந்நிலையில், லண்டனில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகரகம் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.