யாழ்ப்பாண பல்கலைக்கழக 39 ஆவது பட்டமளிப்பு விழா
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் (University of Jaffna) 39 ஆவது பொதுப்பட்டமளிப்பு வைபவம் துணைவேந்தர் சி. சிறிசற்குணராஜா தலைமையில் ஆரம்பமாகியுள்ளது.
மரபார்ந்த பண்பாட்டு அணிவகுப்புடன் நிகழ்வுகள் ஆரம்பமாகியுள்ளன.
பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பேராசிரியர்கள் மற்றும் பீடாதிபதிகள் அணிவகுத்து வர, ஆலவட்டங்கள் சகிதம் விழா அரங்குக்கு வருகைதந்த துணைவேந்தர் அமர்வுகளுக்குத் தலைமை தாங்கிப் பட்டங்களையும், பரிசில்கள் மற்றும் தகைமைச் சான்றிதழ்களையும் வழங்கியுள்ளார்.
எதிர்வரும் 22 ஆம் திகதி வரை
இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை 13 அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தப் பட்டமளிப்பு வைபவத்தில் மூவாயிரத்து 920 மாணவர்கள் பட்டங்களைப் பெறவுள்ளனர்.
இம்முறை உயர் பட்டப் படிப்புகள் பீடம், இணைந்த சுகாதார விஞ்ஞான பீடம், கலைப்பீடம், பொறியியல் பீடம், விவசாய பீடம், முகாமைத்துவக் கற்கைகள் மற்றும் வணிக பீடம், மருத்துவ பீடம், தொழில்நுட்ப பீடம், இந்துக் கற்கைள் பீடம், சித்த மருத்துவ பீடம் மற்றும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் முன்னை நாள் வவுனியா வளாகத்தைச் (தற்போது வவுனியா பல்கலைக்கழகம்) சேர்ந்த வியாபாரக் கற்கைகள் பீடம், பிரயோக விஞ்ஞானங்கள் பீடம் மற்றும் தொழில்நுட்பக் கற்கைகள் பீடம் ஆகியவற்றைச் சேர்ந்த மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில், திறந்த மற்றும் தொலைக்கல்வி முறைமை மூலம் கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்ளுக்கும் பட்டங்கள் வழங்கப்படவுள்ளன.
இந்தப் பட்டமளிப்பு விழாவில் 399 பட்டப்பின் தகைமை பெற்றவர்களுக்கும், 2 ஆயிரத்து 686 உள்வாரி மாணவர்களுக்கும், 702 திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலைய மாணவர்களுக்கும் பட்டங்கள் வழங்கப்பட இருப்பதுடன், 133 உயர் தகைமை மற்றும் தகைமைச் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
அத்துடன், சகல பட்டக் கற்கைநெறிகளுக்குமாக 68 தங்கப் பதக்கங்களும், 57 பரிசில்களும், நான்கு புலமைப்பரிசில்களும், வழங்கப்படவுள்ளன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






7 அறைகள் முதல் உடற்பயிற்சி கூடம் வரை.., சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள வசதிகள் என்னென்ன? News Lankasri

விஜய் டிவியின் நீ நான் காதல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் பிரபலம்... யார் அவர், வீடியோ பாருங்க Cineulagam
