யாழ். பல்கலையின் 3ஆம் நாள் அமர்வுகள்! ஆயிரக்கணக்கான மாணவர்கள் சாதனை
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 40 ஆவது பொதுப்பட்டமளிப்பு விழாவில், 3ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் மாணவர்கள் பெற்றுக் கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ். பல்கலையின் 40ஆவது பொதுப்பட்டமளிப்பு விழா, மூன்றாம் நாள் அமர்வுகள் இன்று(21.02.2026) இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.
பொதுப்பட்டமளிப்பு விழா
கடந்த 19ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகிய இந்த பட்டமளிப்பு வைபவம் 12 அமர்வுகளாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இந்த முறை 3ஆயிரத்து 252 பேர் பட்டங்களையும், தகமைச் சான்றிதழ்களையும் மாணவர்கள் பெற்றுக் கொள்ளவுள்ளனர்.

இந்நிலையில், இந்த வைபவம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் ஐந்தாவது வேந்தர் தகைசால் பேராசிரியர் இ. குமாரவடிவேல் தலைமையில் இடம்பெறுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிலவும் சீரற்ற காலநிலை: மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்வு - மூடப்பட்டுள்ள வீதி குறித்து வெளியான தகவல்
சன் டிவி மருமகள் சீரியல் நடிகை கேப்ரியல்லாவின் சொத்து மதிப்பு.. அடேங்கப்பா இவ்வளவு கோடியா Cineulagam