தமிழ் தேசிய கட்சிகளிடம் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் கோரிக்கை
அனைத்துத் தரப்பினராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தினை முன்னகர்த்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள், ஐக்கிய முன்னணியொன்றினை அமைத்துப் பணியாற்ற வேண்டும் என யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் சி.சிவகஜன் தெரிவித்துள்ளார்.
யாழ். பல்கலைக்கழக பொங்கு தமிழ் நினைவுத் தூபியில் நடைபெற்ற பொங்கு தமிழ் மக்கள் எழுச்சிப் பிரகடனத்தின் 24ஆம் ஆண்டு நாள் நிகழ்வுகளில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
“நல்லாட்சிக்காலத்தில் வரையப்பட்ட 'ஏக்கிய ராஜ்ஜிய' எனும் ஒற்றையாட்சி அரசியலமைப்பு வரைபினை தமிழ் மக்களின் பிரதிநிதிநிதிகளை ஏற்றுக் கொள்ளச் செய்வதனூடாக முன்னெடுப்பதற்கான முனைப்புக்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன.
தமிழ் கட்சிகள் விட்ட தவறு
இவ்வாறானதொரு சூழ்நிலையில் பரந்துபட்ட ஐக்கிய முன்னணியொன்றினை அமைத்து தமிழ் மக்களிற்கான தீர்வுத்திட்டமாக தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்டத்தினையே தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகள் முன்வைக்க வேண்டும் என்பதோடு 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மற்றும் ஏக்கிய ராஜ்ஜிய வரைபுகளை முற்றாக எதிர்ப்பதற்கு முன்வர வேண்டுகின்றோம்.
தமிழ்த் தேசியம் தேர்தல் அரசியலிற்கு அப்பாலானதொன்று! தமிழ்த் தேசியக் கட்சிகள் மக்களாணையை மீறிய கடந்த கால செயல்களின் விளைவே அவர்களின் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களிற்கு ஏற்பட்ட ஆசனங்களின் குறைவிற்குக் காரணமாகும்.

அவர்களின் ஆசனங்களின் இருப்பானது ஒரு போதும் தமிழ்த் தேசியத்தின் இருப்பை பிரதிபலிக்கப் போவதுமில்லை, வீழ்ச்சியடையச் செய்யப்போவதுமில்லை.
தமிழ்த் தேசியத்தை தேர்தல் அரசியலிற்கு அப்பால் மக்களை அரசியற்படுத்தி, அணிதிரட்டி மக்கள் அரசியலை முன்னெடுக்க தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தவறிவிட்டன” என சுட்டிக்காட்டியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அய்யனார் துணை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் நடிகை மதுமிதாவிற்கு ஏற்பட்ட சோகம்... வெளிவந்த வீடியோ Cineulagam
நிலா வீட்டைவிட்டு சென்றதால் சோழன் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கில் குடும்பத்தினர்... அய்யனார் துணை சீரியல் எபிசோட் Cineulagam