நாட்டை உலுக்கும் மர்ம மரணங்களின் பின்னணியில் அரசின் சதி.. எழுந்துள்ள புதிய சர்ச்சை
சிறைச்சாலைகளில் சமீபகாலமாக அதிகரித்து வரும் மர்மமான மரணங்கள் மற்றும் அமைதியின்மைகள், நாடு முழுவதும் அவசரச்சட்டத்தை நடைமுறைபடுத்துவதற்காக அரசாங்கத்தால் தீட்டப்பட்ட சதித்திட்டத்தின் அறிகுறியாக இருக்கலாம் என ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தாம் கட்டுப்படுத்தி விட்டதாக அரசாங்கம் கூறிக்கொள்வதில் முரண்பாடு உள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், சிறைக்கைதிகளைக் கூட திறம்பட நிர்வகிக்க முடியாத நிலையில் இந்த நிர்வாகம் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
வன்முறைச் சம்பவங்கள்..
"சீர்திருத்த மையங்களுக்குள் இத்தகைய சம்பவங்கள் அடிக்கடி நடப்பது வெறும் தற்செயலானது அல்ல.

குறிப்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரின் கூற்றுகள் மூலம் அரசாங்கம் தனது தோல்விகளை ஒப்புக்கொண்டிருப்பது, இந்தச் சூழ்நிலையைக் கையாள்வதில் அவர்களுக்கு இருக்கும் திறமையின்மையையே வெளிப்படுத்துகிறது.
சிறைச்சாலைகள் என்பது மரண தண்டனைகளை நிறைவேற்றுவதற்கான இடங்கள் அல்ல. சிறிய போக்குவரத்து விதிமீறல்களுக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டவர்கள் கூட அந்தச் சுவர்களுக்குள் உயிரிழந்துள்ளனர்.
தனது சிறைச்சாலைகளுக்குள் அமைதியைப் பேண முடியாத ஒரு அரசாங்கம், நாட்டின் ஆட்சியை எவ்வாறு வெற்றிகரமாக நடத்தும் என்று எதிர்பார்க்க முடியும்?" என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
போலியானது என சந்தேகத்திற்கு உட்படுத்தப்பட்ட இலங்கை கடவுச்சீட்டு! முன்னாள் எம்.பிக்கு பிரித்தானியாவில் ஏற்பட்ட சிக்கல்
YOU MAY LIKE THIS VIDEO
இதெல்லாம் வெறும் ட்ராமா! மோகன் சர்மா முதியோர் இல்ல நாடகம் குறித்து குட்டி பத்மினி பரபரப்பு பேட்டி Manithan