தியாகி திலீபனை நினைவு கூர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் இரத்த தானம்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் தியாகி திலீபனின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் இரத்ததான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
கலைப்பீட முன்றலில் கைலாசபதி கலையரங்கிற்கு அருகாமையில் தற்போது திலீபனை நினைவுகூரும் வகையில் இரத்த தானம் இடம்பெற்றுள்ளது.
இரத்த தானம்
யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த இரத்ததான நிகழ்வில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அதிகமானோர் இணைந்து கொண்டு இரத்த தானம் செய்துள்ளனர்.
தியாக தீபம் திலீபன் அவர்களது 38 வது நினைவேந்தல் பருத்தித்துறை தியாகி திலீபன் அவர்களது நினைவிடத்தில் இரண்டாவது நாள் வடமராட்சி மக்களால் நினைவேந்தல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்றைய தினம்(24) காலை 9:55 மணியளவில் தியாக தீபம் திலீபனது 38 வது நினைவேந்தல் பருத்தித்துறை தியாகி திலீபன் அவர்களது நினைவிடத்தில் இரண்டாவது நாள் வடமராட்சி மக்களால் நினைவேந்தல்மேற்கொள்ளப்பட்டுள்ளது.
38 வது நினைவேந்தல்
இதில் முதல் நிகழ்வாக பொது ஈகைச் சுடரினை ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வடமராட்சி அமைப்பாளருமான சிவகுமார் ஏற்றி வைக்க மாவீரர் லெப்டினென்ட் தென்றல் சகோதரரும், ஜனநாயக போராளிகள் கட்சி தலைவருமான சி.வேந்தன் மலர்மாலையினை தியாகி திலீபன் புகைப்படத்திற்கு அணிவித்ததை தொடர்ந்து சிரேஸ்ட ஊடகவியலாளரான சி.த.காண்டிபன்அவர்களால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தொடர்ந்து காணாமல் பொதுமக்கள் மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரதிநிதிகளால் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலதிக தகவல்- எரிமலை
தியாக தீபம் திலீபன் அவர்களின் 10ம் நாள் நினைவேந்தல் நேற்றையதினம் (24) திருகோணமலை சிவன் கோவிலருகில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் திருவுருவப் படம் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இடம்பெற்றது.
இந்நினைவேந்தல் நிகழ்வில் மனித உரிமை செயற்ப்பாட்டாளர்கள், பாதிக்கப்பட்ட வர்கள் கலந்து கொண்டு உணர்வு பூர்வமாக மலர் அஞ்சலி செலுத்தினர்.
மேலதிக தகவல்- ரொசான்
கலந்துரையாடல்
தியாக தீபன் திலீபம் அவர்களது இறுதி நாள் நினைவேந்தல் தொடர்பான கலந்துரையாடலானது நேற்றையதினம் (24)திருகோணமலையில் சம்பூர் ஆலங்குலம் மாவீரர் துயிலுமில்லம் நினைவேந்தல் ஏற்பாட்டு குழுவினரின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
தியாக தீபம் திலீபனின் 38ஆவது நினைவேந்தலை மாவட்டம் தழுவிய ரீதியில் 26.09.2025 ந் திகதியன்று நடாத்துவது தொடர்பாக குறித்த கலந்துரையாடலின் போது கலந்தாலோசிக்கப்பட்டது.
இதில் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள்,பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.






