யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை: பொதுமக்கள் விசனம்(Video)
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீட வளாகத்தில் புத்தர் சிலை வைத்து, பௌத்த கொடிகள் என்பன கட்டப்பட்டு வழிபாடுகள் இடம்பெற்றதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
போயா தினமான நேற்று(01.08.2023) பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும், பின்னர் அந்த புத்தர் சிலை அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்டதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்திருந்தார்.
இவ்வாறு புத்தர் சிலைகளை கொண்டுவந்து வைப்பதுவும் எடுத்துச் செல்வதுமாக செய்து, பின்னர் ஒரேயடியாக சிலையை வைத்துவிட்டு விகாரை அமைக்கக்கூடிய சூழல் இருப்பதாக பல தரப்பினரும் அச்சம் வெளியிட்டுள்ளதாக அறியமுடிகிறது.
பல்கலைக்கழக வளாகத்தில் புத்தர் சிலை

மேலும், யாழ்ப்பாணபல்கலைக்கழகமும் எம்மிடம் இருந்து பறிபோகக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாக அவர்கள்
கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்த புத்தர் சிலையை பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து வழிபட பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி வழங்கியதா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
ஹார்முஸ் நீரிணையில் வெடித்து சிதறிய எண்ணெய் கப்பல்- உலக எரிசக்தி விநியோகத்திற்கு அச்சுறுத்தல் News Lankasri