வடக்கு ஆளுநருக்கு நன்றி தெரிவித்த யாழ். பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தின் நீண்டநாள் கனவாக இருந்து வந்த விடயம், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்களின் முயற்சியால் சாத்தியமாகியுள்ளமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி பேராசிரியர் கே.பகீரதன் தெரிவித்தார்.
புலிக்குளத்தில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்தி நன்கொடையில் 10 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு துருசு அமைக்கும் பணியை ஆரம்பிக்கும் நிகழ்வு இன்று (30.09.2026) மாலை இடம்பெற்றது.
இதில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு துருசு அமைக்கும் பணியை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
அடுத்தகட்டப் பணி
நீண்டகாலமாகத் தீர்வின்றி இருந்து வந்த புலிக்குளம் தொடர்பான விடயங்களுக்கு நடைமுறைத் தீர்வொன்றை ஏற்படுத்தி, அந்த நீரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகப் பீடங்களுக்கும் விவசாய நிலங்களுக்கும் பயன்படுத்தக்கூடிய நிலையை உருவாக்கும் நோக்கில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

துருசு அமைக்கும் பணியை ஆரம்பித்ததைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் த.ராஜகோபு, புலிக்குளம் 2008ஆம் ஆண்டு அமைக்கப்பட்டதாகவும், 2009ஆம் ஆண்டு அது உடைப்பெடுத்ததாகவும் தெரிவித்தார்.
இக்குளத்துக்கு இதுவரை வான் மற்றும் துருசு அமைக்கப்படாத நிலையில், 2017ஆம் ஆண்டு புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 2019ஆம் ஆண்டு நிறைவுசெய்யப்பட்ட போதிலும், அதன் பின்னர் அடுத்தகட்டப் பணிகளை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.



Heart Attack: மாரடைப்பின் போது உயிரைக் காப்பாற்ற உதவும் முதலுதவி பற்றி உங்களுக்கு தெரியுமா? Manithan