இலங்கை - இந்தியா படகுச் சேவை கட்டண குறைப்பு தொடர்பில் அமைச்சர் தகவல்
இலங்கை - இந்தியா இடையிலான கடல்சார் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அந்தவகையில், இருநாடுகளுக்கிடையிலான படகுச் சேவைக்கான வரி 60 டொலரில் இருந்து 5 டொலராக குறைக்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறித்த தகவலை அமைச்சர் பந்துல குணவர்தன இன்று (20.2.2024) செவ்வாய்கிழமை நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
குறைந்த கட்டண முறை
அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கடல்வழிப் பயணிகள் போக்குவரத்தை மேம்படுத்துவதன் மூலம் சுற்றுலாத் துறை, கலாச்சார பரிமாற்றம், கல்வி, மதம், கலாச்சார நடவடிக்கைகள், கலை, விளையாட்டு போன்ற துறைகளில் ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் சாத்தியம் இருப்பதை அரசாங்கம் அங்கீகரிக்கிறது.

அதற்காக, குறைந்த கட்டண பயண மற்றும் போக்குவரத்து கட்டண முறையை அறிமுகப்படுத்துவதற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இலவச பயணப் பொருட்கள்
அதன்படி இலங்கையிலிருந்து பயணிகள் கப்பல்கள் மற்றும் உல்லாசக் கப்பல்கள் மூலம் தற்போது விதிக்கப்படும் deviation வரியை முறையே 5 மற்றும் 20 அமெரிக்க டொலர்களாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பயணிக்கு 60 கிலோ வரையிலான இலவச பயணப் பொருட்கள் கொண்டு செல்வதற்கும் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
Avatar Fire And Ash திரைப்படம் 2 நாளில் செய்துள்ள தாறுமாறு வசூல்.... தெறிக்கும் பாக்ஸ் ஆபிஸ் Cineulagam
ரோஹினிக்கு வந்த அதிர்ச்சி போன் கால், பதற்றத்தில் மொத்த குடும்பத்தினர்.... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
பதறி அடித்துக்கொண்டு வீட்டிற்கு வந்து தாரா சொன்ன விஷயம், அதிர்ச்சியில் நந்தினி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam