யாழ்ப்பாணம் சென்ற விமானம் தரையிறங்குவதில் குழப்பம்
யாழ்பாணம் விமான நிலையம் நோக்கி பயணித்த சர்வதேச விமானம் சீரற்ற காலநிலையால் மீண்டும் சென்னையில் தரையிறங்கியுள்ளது.
சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த விமானமே மீண்டும் சென்னை விமான நிலையத்திற்கு திரும்பி சென்று தரையிறங்கி உள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மோசமான காலநிலை
நேற்றுக் காலை சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் நோக்கிப் புறப்பட்ட பயணிகள் விமானம், யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் நிலவிய மோசமான காலநிலையால் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
குறித்த விமானத்தில் 24 பயணிகள் பயணித்ததாகவும், அவர்களுக்கான மாற்று பயணச்சீட்டுகள் வழங்கி மாற்று பயண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விமானம் இன்று காலை மீண்டும் யாழ்ப்பாணம் வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் பல இடங்களை சுற்றி பார்த்த வெளிநாட்டு வைத்தியர்களுக்கு இயக்கச்சியில் காத்திருந்த ஆச்சரியம்! (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

40 வயது நடிகருக்கு ஜோடியாகும் நாக சைதன்யாவின் மனைவி சோபிதா.. திருமணத்திற்கு பின் கிடைத்த தமிழ் படம் Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam
