தமிழர் தாயகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைகள்! பொலிஸாரின் அராஜகத்திற்கு கண்டனம்

Sri Lanka Police Batticaloa Jaffna Gajendrakumar Ponnambalam Sri Lanka
By Bavan May 23, 2023 09:58 PM GMT
Report

தமிழர் தாயகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி விகாரையை அகற்றக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்கி 9 பேரை கைது செய்தமையை வன்மையாக கண்டிப்பதுடன், வடகிழக்கில் விகாரை அமைப்பு காணி அபகரிப்புக்கு எதிராக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம் தொடரும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள கட்சி காரியாலயத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (23.05.2023) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள விகாரை திறக்கப்படவுள்ள நிலையில் அதனை அகற்றக்கோரி கட்சியின் பொது செயலாளரும், பா.உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தலைமையில் கட்சி உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது பொலிஸார் மிக மோசமாக அவர்களை தாக்கியதுடன் சட்டத்தரணி சுகாஷ், திலீபன், தீசன், ராஜீப், சுதாகரன், கோபி, சற்குணதேவி, தமிழ்மதி, ராஜீ கலைவாணி உட்பட 9 பேரை பலாலி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

உண்மையிலே இந்த நாட்டிலே ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளதுடன் தமிழ் தாயத்தில் விகாரைகள் முளைக்க ஆரம்பித்துள்ளது.

தமிழர் தாயகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைகள்! பொலிஸாரின் அராஜகத்திற்கு கண்டனம் | Jaffna Thiyitti Incedent Police Against

தமிழர்களுக்கு சொந்தமான நிலங்கள்

கடந்த வாரம் திருகோணமலையில் தமிழர்களுக்கு சொந்தமான முருகன் ஆலயத்துக்கு சொந்தமான காணியில் தாய்லாந்தில் இருந்து கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை வைக்க ஏற்பாடு செய்தனர். அதற்கு எதிராக மக்களுடன் ஒன்றினைந்து போராடி அதனை தற்காலிகமாக தடுத்து வைத்திருக்கின்றோம்.

வடக்கு, கிழக்கில் விகாரை அமைப்பது மற்றம் காணி அமைக்கும் செயற்பாடுகளும் துரித கதியில் ஆரம்பிக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. எனவே தமிழர் தாயத்தில் காணி அபகரிப்பு விகாரை அமைப்பது போன்றவற்றை முற்றுமுழுதாக எதிர்ப்போம்.

தமிழ் தாயகம் ஒரு மரபுவழி தாயகம் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் முஸ்லீம் மக்கள் வாழ்கின்றனர். அவர்களுடைய வணக்கஸ்தலங்கள் இடிக்கப்பட்டு விகாரையை அமைப்பதாக இருந்தால் இந்த நாட்டின் அரசின் இலக்கு என்ன? என்பதை சர்வதேச சமூகம் புரிந்துகொள்ளவேண்டும்.

தமிழர் தாயகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள குருந்தூர் விகாரை, தையிட்டி விகாரை , திருகோணமலை வில்லூன்றி முருகன் ஆலயத்தில் புத்தர் சிலை வைப்பது, மன்னார் உயிலங்குளத்தில் விகாரை அமைப்பது போன்ற நடவடிக்கை கைவிடப்பட வேண்டும்.

தமிழர் தாயகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைகள்! பொலிஸாரின் அராஜகத்திற்கு கண்டனம் | Jaffna Thiyitti Incedent Police Against

புத்தர் சிலை அமைக்கும் இலக்கு

அதேபோன்று கிழக்கு மாகாணத்தில் பல்வேறு இடங்களில் புத்தர் சிலை அமைக்க இலக்கு வைக்கப்பட்டுள்ளதுடன், தொல்லியல் இடங்கள் என்ற போர்வையில் தமிழ் மக்கள் காணிகள் இலக்கு வைக்கப்பட்டு அபகரிக்கப்படும் செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

எனவே இவைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இலங்கை வங்குரோத்து நிலைக்கு சென்றபோது இந்தியா உட்பட பல நாடுகள் கண்மூடிக்கொண்டு உதவிகளை செய்திருக்கின்றனர்.

தமிழர் தாயகத்தில் சட்டவிரோதமாக அமைக்கப்படும் விகாரைகள்! பொலிஸாரின் அராஜகத்திற்கு கண்டனம் | Jaffna Thiyitti Incedent Police Against

தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு யுத்தமே இந்த நாடு இந்த கடன் சுமைக்கு போயுள்ளது. எனவே இந்த நாடு கடன் இல்லாத நாடாக மாற்ற வேண்டுமாக இருந்தால் தமிழ், சிங்கள் மக்களுக்கு இடையிலான இனமுரண்பாடு நீக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களின் தேசம் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும். அவ்வாறு அங்கீகரிக்கப்பட்டால் மட்டும் தான் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியும் என்பதுடன் தமிழ் மக்களுக்கு ஒரு தேசம் அங்கீகரிக்கப்படும் வரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் போராட்டம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார்.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW  


மரண அறிவித்தல்
90வது பிறந்தநாளும் 5ம் ஆண்டு நினைவஞ்சலியும்

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, யோகபுரம், Paris, France, Tergnier, France, Chelmsford, United Kingdom

16 Aug, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், இளவாலை சிறுவிளான், Toronto, Canada

09 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, பம்பலப்பிட்டி

14 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, புலோலி

14 Sep, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு

14 Sep, 2018
மரண அறிவித்தல்

Sea Port Estate, Malaysia, Petaling Jaya, Malaysia, Montreal, Canada, Scarborough, Canada, Oakville, Canada

11 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, வட்டுக்கோட்டை, சுவாசி-லெ-ருவா, France

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சிங்கப்பூர், Singapore, நியூஸ்லாந்து, New Zealand

13 Sep, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US