யாழ்.தையிட்டி விவகாரம்: பொலிஸாரால் பலவந்தமாக அகற்றப்பட்டோம் - கஜேந்திரன் (Video)
யாழ்ப்பாணம் - தையிட்டி பகுதியில் சட்டவிரோதமாக இராணுவத்தினரால் அமைக்கப்பட்டுள்ள விகாரையை அகற்றக்கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டமை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் இன்றைய தினம் (25.05.2023) ஊடகங்களுக்கு அவர் கருத்துரைத்துள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது, தையிட்டியில் போராட்டம் நடத்தப்பட்டு வரும் நிலையில், பலாலி பொறுப்பதிகாரி இந்த போராட்டத்தை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட வேண்டும் என்ற நோக்கத்தோடு தவறான கருத்துக்களைக் கூறி, அச்சுறுத்தி வெளியேற்ற முயற்சி செய்தார்.
போராட்டம்
இருந்தாலும், நாங்கள் எங்களுடைய சட்டத்தரணிகள் ஆலோசனைகளோடு சட்டம் மற்றும் நீதிமன்றத்திற்குக் கட்டுப்பட்டு தனியார் காணியில் நின்று போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தோம்.
பல மோசமாக கெடுபிடிகள் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டபோதும், நாங்கள் ஒதுங்கிச் செல்லவில்லை.
23ஆம் திகதி காலை வேளையில் போராட்டத்தை ஆரம்பித்தபோது, நாங்கள் பலவந்தமாக அந்த இடத்திலிருந்து கைது செய்யப்பட்டும், பலவந்தமாக இழுத்தும் அந்த இடத்திலிருந்து அகற்றப்பட்டோம் என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri
