தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு எதிரான தொடர் போராட்டத்தின் இரண்டாம் நாள் இன்று(video)
வலி வடக்கு தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரைக்கு எதிரான 6 ஆம் கட்ட போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றையதினம்(31.07.2023) மாலை ஆரம்பமாகிய நிலையில் இன்று(01.08.2023) இரண்டாவது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
போராட்டகளத்தில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
அடாத்தாக அபகரித்த மக்களது காணிகளில்

“அடாத்தாக அபகரித்த மக்களது காணிகளில், அனுமதியின்றி அமைக்கப்பட்ட விகாரை” என கோஷங்களை எழுப்பியவாறு முன்னெடுக்கப்படும் இந்த போராட்டத்தில் மக்களது நிலங்களை மீள வழங்குமாறு கோரிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |


