யாழ்ப்பாணம் முன்னோக்கி போக தயார் என்ற அறிகுறியினை எடுத்துக்காட்டுகின்றது: அங்கஜன் இராமநாதன்(Photos)
2022 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தில் கிராமிய பொருளாதார வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துகின்ற வகையிலான செயற்றிட்டம் அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்திக்கின்ற போதிலும் அதற்கான கூடுதலான நிதி யாழ் மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற பிரதிக்குழுக்களின் பிரதித்தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரான அங்கஜன் இராமநாதன்(Angajan Ramanathan) தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சின் நெறிப்படுத்தலின் கீழ் யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு, மாவட்ட செயலகத்தின் எற்பாட்டில் மாவட்ட ரீதியாக எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் முன்னெடுக்கயுள்ள அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பில் உயர்மட்டக் கலந்துறையாடல் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.
இவ் கலந்துரையாடலில் நாடாளுமன்ற பிரதிக்குழுக்களின் பிரதித்தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரான அங்கஜன் இராமநாதன் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
இதற்காகத் திட்டங்களின் முன்மொழிகளும் தெரிவிக்கப்பட்டது. ஒவ்வொரு கிராம, கிராமத்துக்கு என்ற வேலைத்திட்டத்தின் கீழ் 30 இலட்சம் ரூபா 435 கிராம சேவையாளர்கள் பிரிவுகளுக்கும், ஒவ்வொரு வட்டாரரீதியாக 40 இலட்சம் ரூபா 222 வட்டாரங்களும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக 150 இலட்சம் 07 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கப்படும் நிதி, அதனை விட மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவருக்கு விசேடமாக 100 மிலலியன் ஒதுக்குவதற்கான நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணம் முன்னோக்கி பாதையில் போக தயார் என்ற அறிகுறியினை எடுத்துக்காட்டுகின்றது. வேறு மாவட்ட போன்று அபிவிருத்தி அடைந்தாக வருவதற்குத் தயார் என்ற அறிகுறிகளைக் காட்டுகின்றபோது தான் பலநாட்டுத் தூதுவர்கள் யாழ்ப்பாணத்திற்கு வந்து போகின்றனர். குறிப்பாக இலங்கைக்கான இந்தியத் தூதுவராக இருந்தாலும் சரி, சீனாத்தூதுராக இருந்தாலும் சரி அவர்கள் உதவிகளை வழங்க முன்வருகின்றனர்.
அதனையும் தடுக்கவும் கூடாது. எங்களுக்குத் தேவைகள் அதிகமாக இருக்கின்றது. நாங்கள் இழந்தது நிறையப் பெறுவதற்கு இலங்கை அரசாங்கத்தின் நிதியுதவி காணாமையால் தேவைகள் பூர்த்தி செய்வதற்குச் சர்வதேச நாடுகளுடன் முன்னேற துடிப்பது எந்தவிதத்தில் பிழை இல்லை என்று இலங்கை நாடு பார்ப்பது இல்லை.
எல்லா நாட்டுடன் இணைந்து பயணிக்கக்கூடியதாக இருக்கவேண்டும். எதிர்காலத்தில் அமெரிக்கா, கனடா, மலேசியா, ஜேர்மன், பிரான்ஸ், இத்தாலி, சிங்கப்பூர் போன்ற நாடுகள் வரலாம். அதற்காக நாங்கள் தனித்துவமான பண்புகளை கட்டியெழுப்பி எமது மாவட்டத்தின் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதில் எந்தவொரு தவறுமில்லை என தெரிவித்துள்ளார்.
இதன்போது யாழ் மாவட்டத்தின் சமூர்த்தியுடாக வாழ்வாதார கட்டமைப்பு உயர்த்தல் தொடர்பான பயிற்சி நெறியினை பூர்த்தி செய்த 30 மாணவர்களுக்கான சான்றிதழ்கள் நாடாளுமன்ற பிரதிக்குழுக்களின் பிரதித்தலைவரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவரான அங்கஜன் இராமநாதன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஆகியோர்கள் இணைந்து வழங்கி வைத்தனர்.
இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், திட்டமிடல்
பணிப்பாளர் நிக்லஸ்ப்பிள்ளை மோகேனேஸ்வரன், (காணி) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்
முரளிதரன் உள்ளிட்ட பிரதேச செயலாளர்கள், பிரதேச செயலக உதவித்திட்டமிடல்
உதவிப்பணிப்பாளர்கள், சமுர்த்தி அலுவலகர்கள்,பலரும் கலந்துகொண்டனர்.

