ஈழத்தின் பிரசித்தி பெற்ற செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா(Video)
ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்றைய தினம் தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்பெற்றது.
செல்வச்சந்நிதி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் ஆகஸ்ட் 16ம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
செல்வச்சந்நிதி முருகனுக்கு இன்று காலை தேர் திருவிழா இடம்பெற்றதுடன் நாளை (31.08.2023) காலை தீர்த்தத் திருவிழாவும் மாலை 6 மணிக்கு மௌனத் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
செய்தி - தீபன்
முதலாம் இணைப்பு
வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவின் இரத உற்சவம் இன்று புதன்கிழமை இடம்பெறுகிறது.
வருடாந்த திருவிழாவில் இன்று(30.08.2023) காலை விசேட பூஜைகள் இடம்பெற்று முருகப் பெருமான் தேரில் ஆரோணித்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கவுள்ளார்.
செல்வச் சந்நிதி ஆலய வருடாந்த மஹோற்சவம் கடந்த 16 ஆம் திகதி ஆரம்பித்து நேற்று சப்பரத் திருவிழா இடம்பெற்ற நிலையில், இன்று தேர் திருவிழா இடம்பெறுகிறது.





















தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 5 மணி நேரம் முன்

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
