மாபெரும் பேரணிக்குள் நுழைந்து புலனாய்வாளர்கள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி (Video)
வடக்கு, கிழக்கு தழுவிய பூரண ஹர்த்தாலுடன் யாழ். பல்கலைக்கழக முன்றலில் இருந்து மட்டக்களப்பு நோக்கிய இந்த சுதந்திர தின எதிர்ப்பு கறுப்பு பேரணி முன்னெடுக்கப்படுகிறது.
தமிழர் தாயகத்தின் மீதான ஆக்கிரமிப்பை நிறுத்து, தடைகளை உடைப்போம், அபகரிக்கப்பட்டுள்ள எமது நிலங்களை திருப்பிக்கொடு, தமிழர் தேசம் எமது அடையாளம் ஆகிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு இந்த பேரணி மேற்கொள்ளப்படுகிறது.
குறித்த போராட்ட பேரணி மேற்கொள்ளப்படுவதற்கு எதிராக பொலிஸார் அறிவிப்புகளை மேற்கொண்டும் வரும் போதிலும் கூட அதனை மீறி போராட்ட பேரணி மேற்கொள்ளப்படுகிறது.
புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்
போராட்டத்திற்குள் நுழைந்து அரச புலனாய்வாளர்கள் தொடர் அச்சுறுத்தலை மேற்கொண்டு வரும் போதிலும் இந்த போராட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும் புலனாய்வுப் பிரிவினர் சிங்கக் கொடிகளுடன் ஊர்வலத்தின் மத்தியில் ஊடுருவி குழப்பத்தை விளைவிக்க முயற்சிப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.




சரிகமப சீசன் 5 போட்டியாளர்களுக்கு மாபெரும் பரிசுத் தொகை அறிவிப்பு... இத்தனை லட்சத்தில் வீடா? Cineulagam

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
