மாவீரர் நாளில் குழப்பத்தை ஏற்படுத்த சதி! யாழ் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்த பொலிஸார்
யாழ். நகரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பொலிஸார் விரட்டியடித்துள்ளதுடன், அவ்விடத்தில் சற்று நேரம் பதற்ற நிலை ஏற்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உயிரிழந்தோரை நினைவு கூரும் மாவீரர் நினைவுதினம் இன்றைய தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது.
இந் நிலையில் சிலர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திற்கு முன்னாள் தேசிய கொடியை ஏந்தி விடுதலைப் புலிகளுக்கு எதிரான சுலோகங்களை தாங்கியவாறு போராட்டம் முன்னெடுக்க தயாராகியுள்ளனர்.
எனினும், இவ்வாறு ஆட்கள் ஒன்றுகூடி போராட்டங்கள் நடத்த முடியாது என கூறி பொலிசார் போராட்டத்தில் ஈடுபட்டோரை அவ்விடத்திலிருந்து கலைந்து செல்லுமாறும் இல்லாவிடின் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் முட்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்ததை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர்.
புதிய சீரியலில் ஒன்றாக நடிக்கப்போகும் எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் நடிகர்கள்... யார் தெரியுமா? Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam