இனவாதத்துக்கு விலை போனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டுகின்றனர்: டக்களஸ் தரப்பு குற்றச்சாட்டு

Jaffna Sri Lanka Sri Lanka Presidential Election 2024
By Theepan Apr 19, 2024 11:54 PM GMT
Report

தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலை போயுள்ளவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி தூபமிட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்றையதினம் (19.04.2024) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியள்ளார்.

கொழும்பில் போதைப் பொருளுடன் இலங்கையின் கடற்படை உறுப்பினர்கள் கைது

கொழும்பில் போதைப் பொருளுடன் இலங்கையின் கடற்படை உறுப்பினர்கள் கைது

ஜனாதிபதித் தேர்தல் 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அனைத்து தமிழ் கட்சிகளும் ஓரணியாக ஒன்றிணைந்து ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் ஒருவரை முன்நிறுத்தி தமிழ் மக்களின் முழுமையான வாக்குகளையும் அவருக்கு வழங்கினாலும் தமிழ் மக்களின் சார்பில் அவர் வெற்றிபெற்று ஜனாதிபதியாக வரமுடியாது.

அதனடிப்படையில் தமிழ் மக்களின் அரசியல் களத்தில் இருக்கும் சில சதியாளர்களின் திட்டமாகவே ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பின் பொது வேட்பாளர் முன்மொழிவு இருக்கின்றது.

இனவாதத்துக்கு விலை போனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டுகின்றனர்: டக்களஸ் தரப்பு குற்றச்சாட்டு | Jaffna Press Meet Srirangeswaran Tamil Candidate

அதேவேளை அது தமிழ் மக்களின் நலன்சார்ந்தது அன்றி அரசியல் தீர்வுகளுக்கான வழியை காட்டும் ஒன்றாக ஒருபோதும் இருக்கப்போவதில்லை.

அத்துடன் நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கான ஏதுநிலைகள் காணப்பட்டு வருகின்ற நிலையில் தமிழ் தேசியம் பேசும் அரசியல் தரப்பினரிடையே தமிழ் பொது வேட்பாளர் தொடர்பாக பேசப்பட்டு வருகின்றன.அது மட்டுமல்லாது பல்வேறுபட்ட கருத்துக்களும் அவர்களால் கூறப்பட்டு வருகின்றன.

கடந்த காலங்களிலும் தமிழ் மக்களின் சார்பில் சிலர் போட்டியிட்டுள்ள வரலாறுகள் இருக்கின்றன.

இதேநேரம் 2010 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னரான ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டபோது புலிகளின் ஏற்பாட்டில் தெரிவுசெய்யப்பட்ட 22 உறுப்பினர்களும் இணைந்து தமிழ் மக்களை அழித்ததாக அவர்களாலேயே கூறப்பட்ட சரத் பொன்சேகாவுக்கு வாக்குகளை அளிகுமாறு தமிழ் மக்களிடம் கோரியிருந்தனர்.

இனவாதத்துக்கு விலை போனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டுகின்றனர்: டக்களஸ் தரப்பு குற்றச்சாட்டு | Jaffna Press Meet Srirangeswaran Tamil Candidate

குறிப்பாக யுத்தம் நிறைவுக்கு வந்து ஓராண்டுக்குள்ளேயே இதை அறிவித்திருந்தார்கள்.

கடந்த கால தேர்தல்களில்களின்போதும் தமிழ் அரசியல் கட்சிகளால் குறிப்பாக தமிழ் மக்களின் பிரதிநிதிதிகள் தாங்கள் தான் என கூறியவர்களால் சஜித் பிரேமதாச போன்றோருக்கும் ஆதரவுகள் கொடுக்கபட்டன. 

அதுமாத்திரமின்றி இன்றைய ஜனாதிபதியை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக பணப்பெட்டிகள் கைமாறிய கதைகளும் அனைவருக்கும் தெரிந்ததே.

தமிழ் பொது வேட்பாளர்

இவ்வாறானவற்றை எல்லாம் செய்த இவர்கள் இன்று பொது வேட்பாளரை முன்னிறுத்துமாறு கூறுவதானது கடந்த காலங்களில் அந்த சூழ்நிலையில் மனநிலை எவ்வாறிருந்தது?

அல்லது அரசியல் நிர்வாக தெளிவற்ற நிலையிலிருந்தார்களா? அல்லாது நிர்வாக ஞானம் இல்லாதிருந்தார்களா? என்ற கேள்விகளை இன்று பொது வெளியில் தோற்றுவித்துள்ளது.

இனவாதத்துக்கு விலை போனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டுகின்றனர்: டக்களஸ் தரப்பு குற்றச்சாட்டு | Jaffna Press Meet Srirangeswaran Tamil Candidate

அந்தவகையில் இன்று இவ்வாறான செயற்பாட்டை முன்னெடுக்கும் நோக்கம் தென்னிலங்கையில் இருக்கும் சில இனவாத தலைவர்களுக்கு விலைபோய், அவர்களது பணப்பெட்டிகளுக்காக எதிர்பார்த்துக்கொண்டிருக்கம் தரப்பினரே இந்த பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டி அதற்கு தூபமிட்டுக்கொண்டிருக்கின்றார்கள்.

அந்தவகையில் இந்த பொது வேட்பாளர் விடையத்தில் தமிழ் மக்கள் ஏமாராது இருப்பது அவசியமாகும்.

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க போட்டியிடும் சூழ்நிலை இருக்குமாயின் அவர் அதிகளவான வாக்குகளை பெற்று வெற்றியீட்டுவதற்கான சூழ்நிலையும் காணப்படுகின்றது. 

இனவாதத்துக்கு விலை போனவர்களே தமிழ் பொது வேட்பாளர் விவகாரத்தை தூண்டுகின்றனர்: டக்களஸ் தரப்பு குற்றச்சாட்டு | Jaffna Press Meet Srirangeswaran Tamil Candidate

இவ்வாறான ஒரு நிலையில்தான் ரணிலின் வெற்றியை கேள்விக்குட்படுத்தும் செயற்பாட்டை நிறைவுசெய்யும் சதியாளர்களின் கையாளர்களாகவே இந்த பொது வேட்பாளர் விடயத்தை கையிலெடுத்துள்ள தமிழ் தரப்பினரது செயற்பாடு உள்ளது” என தெரிவித்துள்ளார்.

ஈரான் - இஸ்ரேல் போரில் உள்நுழையும் 9 நாடுகள்: பிரித்தானிய ஜோதிடர் வெளியிட்ட கணிப்பு

ஈரான் - இஸ்ரேல் போரில் உள்நுழையும் 9 நாடுகள்: பிரித்தானிய ஜோதிடர் வெளியிட்ட கணிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிஐடி விசேட விசாரணை

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிஐடி விசேட விசாரணை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Aachen, Germany, Cologne, Germany

27 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, பாவற்குளம், கனடா, Canada

11 Jul, 2020
மரண அறிவித்தல்

அல்லைப்பிட்டி 2ம் வட்டாரம், Aulnay-sous-Bois, France

08 Jul, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bünde, Germany, Selm, Germany

11 Jul, 2024
மரண அறிவித்தல்

அனலைதீவு, அராலி, Toronto, Canada

06 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை வடக்கு

11 Jul, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வாழைச்சேனை, Toronto, Canada

10 Jul, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஈச்சமோட்டை, இறம்பைக்குளம், Scarborough, Canada

12 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Markham, Canada

07 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, பேர்ண், Switzerland

12 Jul, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், கொழும்பு

11 Jun, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
13ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், பிரான்ஸ், France

10 Jul, 2020
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, Toronto, Canada

07 Jul, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US