உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சிஐடி விசேட விசாரணை
இலங்கையின் குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் தாம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் (Easter attack) தொடர்பான பயன்மிக்க பல தகவல்களை அவர்களுக்கு வழங்கியதாக, கொழும்பு உயர் மறைமாவட்டத்தின் தொடர்பாடல் குழு உறுப்பினர் அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ(Cyril Gamini Fernando) தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
குற்றப்புலனாய்வு விசாரணை
கத்தோலிக்க சிங்கள வார இதழொன்றின் ஆசிரியராகவும் செயற்படும் பெர்னாண்டோ, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக தன்னிடம் இருந்த அனைத்து தகவல்களையும் குற்றப் புலனாய்வுத் துறையினருக்கு வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார்.
உயிர்த்த ஞாயிறு கலவரம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையிடம்ஏற்கனவே பல தகவல்கள் உள்ளன. இருப்பினும், இன்றுவரை முறையான விசாரணை நடத்தப்படவில்லை.
இந்நிலையில், தாம் வழங்கிய தகவல்கள் ஏதேனும் மாற்றத்தை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 6 மணி நேரம் முன்

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
