இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு: வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு

Indian fishermen Sri Lanka
By Ashik Jan 22, 2024 03:21 AM GMT
Report

வெளிவிவகார அமைச்சின் அழுத்தத்தினாலேயே இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிக்க கடற்றொழில் அமைச்சர்  இணங்கியிருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக வடமாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சூழ்நிலையில் கடற்றொழிலாளர்களின் விடுவிப்பிற்கு வடக்கு கடற்றொழிலாளர்களாகிய நாங்கள் கடும் எதிர்ப்பை வெளியிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.  

மன்னாரில் நேற்றைய தினம் (21.01.2024) மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,


இந்திய கடற்றொழிலாளர்கள்

தற்போது இலங்கை சிறையில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களை விடுவிப்பது தொடர்பாக வெளிவந்திருக்கும் தகவல்கள் என்ற ரீதியில் வடபகுதியில் இருக்கும் கடற்றொழிலாளர்கள் இதனை எவ்வாறு நோக்குகிறார்கள்.

இந்த பிரச்சினையை அரசாங்கம் எவ்வாறு முடிவுக்கு கொண்டு வர இருக்கின்றார்கள் என்பது தொடர்பாக வெளிப்படுத்த விரும்புகின்றேன்.

இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு: வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு | Jaffna Press Meet Sri Lankan Fisherman

குறிப்பாக ஒரு மாத காலப்பகுதிக்குள் வடக்கில் இருக்கின்ற நெடுந்தீவு, பருத்தித்துறை அதற்கு அப்பால் சில நாட்களுக்கு முன் மன்னார் கடற்பரப்புக்குள் கைது செய்யப்பட்ட 40க்கும் மேற்பட்ட இந்திய தமிழக கடற்றொழிலாளர்கள் நேற்றைய தினம் கடற்றொழில் அமைச்சின் சிபாரிசுக்கு அமைய நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்கப்படும் தகவலை நாங்கள் ஊடகங்கள் வாயிலாக அறிகின்றோம்.

இந்த தகவல் உண்மையில் கடற்றொழில் அமைச்சரின் நிலைப்பாடு என்ன? என்பதை கேள்வி குறியாக்கியுள்ளது.

குறிப்பாக இதேபோன்ற ஒரு விடயம் சில மாதங்களுக்கு முன்னர் இந்திய நிதியமைச்சர் தமிழ் நாட்டுக்கு வந்த போது அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எந்தவித சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தாத மீனவர்கள் 20 பேர் விடுவிக்கப்பட்டிருந்தனர். அதே நேரம் நாங்கள் அதற்கு எங்களுடைய எதிர்ப்புக்குரலை வெளியிட்டிருந்தோம்.

அமெரிக்காவில் பனிப்புயல்: 61 பேர் பலி

அமெரிக்காவில் பனிப்புயல்: 61 பேர் பலி

கோரிக்கைக்கு செவிசாய்க்காத அரசாங்கம்

தற்போது கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 40 கடற்றொழிலாளர்களை விடுவிப்பதற்கு நாட்டில் ஜனாதிபதி ஒருவர் இல்லாத நிலையில் வெளிவிவகார அமைச்சரின் வேண்டுகோளுக்கு அமைய கடற்றொழில் அமைச்சர் விடுவிப்பதாக அந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கின்றது.

எனவே நாட்டில் ஜனாதிபதி இருந்தாலும் இதே நிலை தான், கடற்றொழில் அமைச்சர் இருந்தாலும் இந்த நிலை தான் என்றால் ஏன் இந்த கைதுகள் இடம்பெறுகின்றது.இவ்வளவு பணம் செலவு செய்து இந்த கடற்றொழிலாளர்களை கைது செய்ய வேண்டுமா? என்ற கேள்வி இருக்கிறது.

நாங்கள் வலியுறுத்துகின்ற ஒரே விடயம் இந்திய கடற்றொழிலாளர்களின் வருகை முற்றுமுழுதாக வடபகுதி கடற்பரப்புக்குள் அனுமதிக்கக்கூடது என்பதை வலியுறுத்தி தொடர்ந்து இந்த கைதுகளை மேற்கொள்ளுமாறும் அவர்களுடைய படகுகளை பறிமுதல் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றோம்.

இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு: வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு | Jaffna Press Meet Sri Lankan Fisherman

வடபகுதி கடற்றொழிலாளர்கள் முன்வைக்கின்ற எந்த கோரிக்கையையும் செவிசாய்க்காத அரசாங்கமும் இந்த கடற்றொழில் அமைச்சும் வெறுமனே இந்திய உயர்மட்ட தலைவர்கள் தமிழ் நாடு வருகின்ற போது அவர்களால் விடுக்கப்படுகின்ற கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மனிதாபிமான அடிப்படையில் விடுவிக்கின்றோம் என்றுக்கூறி விடுவிக்கின்றார்கள். தொடர்ந்தும் இந்த நிலைதான் காணப்படுகின்றது.

இது மனிதாபிமானமா? அல்லது பயமா அவர்களுக்காக நாங்கள் பயப்படுகின்றோமா? ஒரு பெரிய நாடு சிறிய நாட்டை பயம்காட்டி தங்களுடைய வேலையை செய்கின்றார்களா? என்ற கேள்வியை நாங்கள் முன்வைக்கின்றோம்.

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை


நல்லிணக்க அடிப்படையில் நாம் விடுவது தவறு என்று நாங்கள் கூறவில்லை. ஆனால் நல்லிணக்கம் என்பது என்ன? ஒருவர் ஒரு தரம் வருகின்றார் மனிதாபிமானமாக அவரை விடுவிக்கின்றோம், இரண்டாவது முறை அதே தவறு செய்யும் போது எவ்வாறு அந்த மனிதாபிமானத்தை அல்லது நல்லிணக்கத்தை பற்றி பேசுவது?

எமது வளங்களை அழிக்கிறார்கள், எமது எல்லையை தாண்டி எமது கரையோரங்களுக்கு வந்து இந்த வேலை செய்கிறார்கள், எனவே அவர்களை கைது செய்யுங்கள். அவர்களுடைய படகுகளை பறிமுதல் செய்யுங்கள் என நாங்கள் கூறுவது வெறுமனே கூச்சல் அல்ல. எமது வாழ்வாதார இழப்பு ,இந்த நாட்டின் இறைமை பறிபோகும் தன்மையை இந்த நாட்டின் பிரஜை என்ற வகையில் இங்கு வாழ்கின்ற மக்கள் என்ற வகையில் தொடர்ந்து வலியுறுத்துகின்றோம்.

இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு: வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு | Jaffna Press Meet Sri Lankan Fisherman

எனவே நல்லிணக்கம் என்பதை இந்த அரசு சரியாக புரிந்துக்கொள்ளவில்லை. அல்லது சரியாக புரிந்துக்கொண்டு அந்த கடற்றொழிலாளர் விடுவிப்பை செய்யவில்லை. குறிப்பாக ஒருவரை விடுவிப்போம் என்றால் எந்த நாடாவது சரி அந்த கோரிக்கையை விடுப்பவரோ சரி தயவு செய்து அந்த நாட்டுக்கு போகாதீர்கள்.

அந்த நாட்டில் இருக்கின்ற மக்களை சுரண்டாதீர்கள், அந்த மக்களுக்கு துன்பத்தை கொடுக்காதீர்கள், நமது எல்லைக்குள் தொழில் செய்யுங்கள், கரையோரம் வரை போகாமலாவது தொழில் செய்யுங்கள் என்ற கோரிக்கையை தெரிவிக்கலாம்.

ஆனால் இங்கு கேட்பவரும் விடுவிப்பதில்லை நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்கும் அரசும் கூட இந்த நிபந்தனையை விதிப்பதும் இல்லை.

உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

உலக அளவில் உணவுப் பொருட்களின் விலை உயரும் அபாயம்

நலன் சார்ந்த ஒப்பந்தம்

எனவே வெறுமனே பிடிப்பதும் அவர்களை ஐந்து, பத்து நாட்களில் விடுவிப்பது தான் இந்த மனிதாபிமானமா? என்ற கேள்வி வடபகுதி கடற்றொழிலாளர்கள் மத்தியில் இருக்கின்றது.

இந்த நடைமுறை இந்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே இந்த கடல் வளங்களை கையாளுவது தொடர்பான ஒப்பந்தம் ஒன்று செய்யப்படுகின்றது. அந்த ஒப்பந்தத்தில் முழுக்க முழுக்க இந்திய நலன் சார்ந்த ஒப்பந்தமாக இருக்கின்றது.

இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு: வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு | Jaffna Press Meet Sri Lankan Fisherman

வெறுமனே கடற்றொழில் அமைச்சர் நான் தான் கடற்றொழில் அமைச்சர் நான் தான் தீர்மானம் எடுப்பேன் என கூறி வந்தாலும் நாட்டில் ஒரு வெளிவிவகார கொள்கை இருக்கின்றது.

நாட்டுக்கிடையில் ஒப்பந்தம் இருக்கின்றது. அந்த ஒப்பந்தம் தான் புதிதாக கொண்டு வர இருக்கும் சட்ட வரைபில் வெளிநாட்டு படகுகளை அனுமதியோடு வரியை பெற்றுக்கொண்டு வசூலை பெற்றுக்கொண்டே விடுவிப்பது என்பது அந்த வெளிவிவகார கொள்கையின் உள்ள விடயம்.

எனவே நாங்கள் அவ்வாறு நான் அதை திருத்த முற்பட்டாலும் அந்த விடயத்தில் அரசு விட்டு கொடுப்பை செய்யுமா என்பது கேள்விக்குறி.

இந்திய கடற்றொழிலாளர்கள் விடுவிப்பு: வடக்கு கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பு | Jaffna Press Meet Sri Lankan Fisherman

எனவே வெளிவிவகார அமைச்சு இதில் முழுமையாக தலையிட்டு இருக்கின்றது. வெளிவிவகார அமைச்சின் அழுத்தத்தினால் தான் கடற்றொழில் அமைச்சர் இந்த முடிவை எடுத்திருப்பார் என்று எண்ணத்தோன்றுகின்றது.

நான் தான் கடற்றொழில் அமைச்சர் நான் எடுப்பது தான் தீர்மானம் என்பதை போல இருப்பதை விடுத்து இப்போதாவது அவர் தன்னுடைய நிலையில் இருந்து மாற்றத்தை பெற வேண்டும். அல்லது எங்களுக்கு ஒரு சரியான விடயத்தை குறிப்பிட வேண்டும். தொடர்ச்சியாக அந்த விஷயத்தை மட்டும் கூறுபவராக இருந்தால் நாங்கள் அவர் மீது சந்தேக பார்வையோடு பார்க்க வேண்டிய தேவை ஏற்படும் என்பதை வலியுறுத்தி கூறுகின்றேன்” என தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் வற் வரி இன்றி பொருட்கள் விற்பனை: திறக்கப்படவுள்ள கடைகள்

நாடு முழுவதும் வற் வரி இன்றி பொருட்கள் விற்பனை: திறக்கப்படவுள்ள கடைகள்


மரக்கறிகளின் விலை 50 வீதத்தால் குறைவு

மரக்கறிகளின் விலை 50 வீதத்தால் குறைவு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
3ம் ஆண்டு நினைவஞ்சலி

இருபாலை, கொழும்பு

03 Sep, 2023
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
மரண அறிவித்தல்

மந்துவில், கொடிகாமம்

11 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Bondy, France

09 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாவிட்டபுரம், முரசுமோட்டை

20 Sep, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

மதுரை, தமிழ்நாடு, India

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
நன்றி நவிலல்

யாழ் சண்டிலிப்பாய் மேற்கு, Jaffna, Vaughan, Canada

12 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, Lausanne, Switzerland

01 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

02 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கட்டுவன், வட்டக்கச்சி இராமநாதபுரம்

10 Sep, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், ரோம், Italy, Dortmund, Germany

11 Sep, 2025
மரண அறிவித்தல்

மீசாலை, Le Mée-sur-Seine, France

08 Sep, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், திருநெல்வேலி, யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, India, கொழும்பு, Montreal, Canada

02 Sep, 2024
மரண அறிவித்தல்

தாவடி, ஊரெழு, சிட்னி, Australia

07 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US