இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் விடுத்துள்ள எச்சரிக்கை
சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் பேருந்து உரிமையாளர்களுக்கு அபராத பத்திரங்களை அனுப்பும் நடவடிக்கையை பொலிஸார் நடைமுறைப்படுத்தினால், தாம் சேவைகளில் இருந்து விலகியிருக்கப்போவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
சிசிரிவி காட்சிகளின் அடிப்படையில் அபராத பத்திரங்களை இன்று முதல் அனுப்ப பொலிஸார் திட்டமிட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
தவறுகள் தொடர்பான அபராத பத்திரம்
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
“பேருந்துகளின் தவறுகள் தொடர்பான அபராத பத்திரங்களை பேருந்தின் உரிமையாளருக்கு அனுப்பி வைப்பது நியாயமற்றது.
பேருந்து சங்கத்துடன் எவ்வித கலந்துரையாடலும் இன்றி பொலிஸாரினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
பேருந்து முன்னுரிமைப் பாதையை நடைமுறைப்படுத்தி, பேருந்துகளை இயக்க முறையான ஏற்பாடுகளைச் செய்தால், பேருந்து உரிமையாளர்கள் இந்த முன்மொழிவுக்கு உடன்படுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
