பகிரங்க விவாதத்துக்குப் பயப்படாமல் வாருங்கள்: தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் மீண்டும் அழைப்பு

Jaffna Douglas Devananda Sri Lanka
By Rakesh Dec 27, 2023 12:18 AM GMT
Report

என்னோடு பகிரங்க விவாதத்துக்குப் பயப்படாமல் வருமாறு தமிழ்க் கட்சிகளுக்கு மீளவும் அழைப்பு விடுக்கின்றேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (26) நடத்திய ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

13 ஆவது திருத்தம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"நாங்கள் முப்பது வருடங்களுக்கு மேலாகச் கூறி வருகின்ற எமது அரசியல் நிலைப்பாட்டுக்கு ஏனைய தமிழ்க் கட்சிகளும் தற்போது வந்திருக்கின்றன.

குறிப்பாக இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலமாகக் கொண்டு வரப்பட்ட 13 ஆவது திருத்தத்தை நாம் ஏற்றுக்கொண்டபோது அதனைத் ஏற்க மாட்டோம் என்று கூறியவர்கள் இன்றைக்கு அது வேண்டும் என கலந்துரையாடல் நடத்துகின்றனர்.

பகிரங்க விவாதத்துக்குப் பயப்படாமல் வாருங்கள்: தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் மீண்டும் அழைப்பு | Jaffna Press Meet Douglas

இதனூடாக அன்று முதல் இன்று வரை உண்மையையும் சாத்தியமானதையுமே நாம் கூறி வருகின்றோம் என்பதை அனைவரும் விளங்கிக்கொள்ள வேண்டும்.

அதாவது அன்று நாம் சொன்னதை நிராகரித்தவர்கள் இன்று அதுவே சரியானது என ஏற்றுக்கொண்டுள்ளதுடன் அதனையே வழங்கக் கோருகின்றமை காலம் கடந்த ஞானம்.

எமது மக்களின் பிரச்சினைகளை மேதாவித்தனத்தோடு அணுக முற்பட்டால் இழப்புத்தான் ஏற்படும். ஆகையால் அதிலிருந்து விடுபட்டு நடைமுறைச் சாத்தியமான வழியில் எடுதுரைத்தால் வெற்றி பெறலாம் என்பது எனது அனுபவம்.

குறிப்பாக 13 ஆவது திருத்தத்தை ஏற்றுக்கொண்டு மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையும் வேலைத்திட்டமும் எம்மிடம் உள்ளது. ஆனால், மற்றக் கட்சிகளிடம் அப்படியான ஒரே கொள்கையோ அல்லது வேலைத்திட்டங்களோ இல்லை.

பகிரங்க விவாதத்துக்குப் பயப்படாமல் வாருங்கள்: தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் மீண்டும் அழைப்பு | Jaffna Press Meet Douglas

உண்மையில் மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்பதை விட அந்தப் பிரச்சினைகள் தீர்ந்து விடக் கூடாது என்பதற்காகவே அப்பாவி மக்களை ஏமாற்றி உசுப்பேத்துகின்ற சுத்துமாத்து அரசியலைத் தமிழ்க் கட்சிகள் முன்னெடுக்கின்றன.

இங்குள்ள ஒரு எம்.பியுடன் தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் பங்குபற்றியிருந்தபோது நான் பல உண்மைகளை வெளிப்படுத்தியிருந்தேன். குறிப்பாக அவர் சார்ந்த கட்சியின் கொள்கை மற்றும் நிலைப்பாடுகள் தொடர்பிலும், அந்தக் கட்சியின் முன்னைய தலைவர்கள் செய்த விடங்கள் குறித்தும் கூறியிருந்தேன்.

அன்று அவ்வாறு எல்லாம் செயற்பட்டவர்கள்தான் இன்றைக்கு வீர வசனங்களைப் பேசி அரசியலைச் செய்கின்றனர்.

தமிழ்க் கட்சிகள் 

உண்மையாகவே இங்குள்ள தமிழ்க் கட்சிகள் பலவற்றுக்கும் பல தடவைகள் பகிரங்க விவாதத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தபோதும் அவர்கள் விவாதத்துக்கு வருவதில்லை.

பகிரங்க விவாதத்துக்குப் பயப்படாமல் வாருங்கள்: தமிழ்க் கட்சிகளுக்கு டக்ளஸ் மீண்டும் அழைப்பு | Jaffna Press Meet Douglas

நான் பொதுவாக அவர்களுக்கு ஒரு சவால் விடுகின்றேன். எமது கட்சிக்கு நீங்கள் நீண்டகாலமாகச் சேறுபூசி எனது குணாதியங்களைஎச் சிதைக்கும் வகையில் செயற்பட்டு வந்தீர்கள். ஆனால், அதைக் குறுகிய காலத்தில் விளங்கப்படுத்த முடியாது என்பதால் உங்களைப் பகிரங்க விவாதத்துக்கு அழைப்பு விடுத்து வந்தேன். ஆனால், நீங்கள் எவரும் விவாதத்துக்கு வருவதில்லை.

ஏனெனில் பகிரங்கமாக விவாதத்துக்கு வந்தால் உங்களின் ஏமாற்று வித்தைகள் தெரியவந்துவிடும் என அஞ்சுகின்றீர்கள். அத்தோடு துரோகிப் பட்டமும் உங்களுக்குச் சூட்டப்பட்டுவிடும் எனவும் பயப்படுகின்றீர்கள்.

இன்றைய சூழ்நிலையில் என்னோடு பகிரங்க விவாதத்துக்குப் பயப்படாமல் வருமாறு தமிழ்க் கட்சிகளுக்கு மீளவும் அழைப்பு விடுக்கின்றேன்” என தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட ஈரான் புரட்சி படை தளபதி

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட ஈரான் புரட்சி படை தளபதி

நாசாவினால் நடத்தப்பட்ட போட்டியில் சாதனை படைத்த இலங்கை சிறுவன்

நாசாவினால் நடத்தப்பட்ட போட்டியில் சாதனை படைத்த இலங்கை சிறுவன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US