”தமிழ் தேசியம் நீக்கப்பட்ட அரசியலுக்கு இடமளிக்க வேண்டாம்”- யாழ்ப்பாணத்தில் விடுக்கப்பட்டுள்ள கோாிக்கை (காணொளி)
“தமிழ் தேசியம் நீக்கம் செய்யப்பட்ட அரசியலுக்கு இடமளிக்கவேண்டாம்” என்று சமூக விஞ்ஞான ஆய்வு மையம், தமிழ் மக்களிடம் கோாிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாண ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றிய சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும், மூத்தப் போராளியும், அரசியல் ஆய்வாளருமான ஜோதிலிங்கம் இந்தக் கோாிக்கையை விடுத்தார்.
மாவீரா் தின நிகழ்வுகள் தொடா்பாக வடக்குகிழக்கு ஆயர்கள் வெளியிட்ட கருத்து தொடா்பிலேயே, யாழ்ப்பாண சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் நிலைப்பாட்டை அவர் வெளியிட்டார்.
தமிழ் மக்களின் அகப்பிரச்சனைகளை புறப்பிரச்சனைகளாக மாற்றக்கூடாது என்று அவா் குறிப்பிட்டார்.
எனவே ஆயர்களின் கருத்தைக் கொச்சைப்படுத்தாது கலந்துரையாடலுக்கு செல்லவேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்தார்.
