யாழில் உயிரிழந்த சிறுமி : வெளியான அதிர்ச்சி தகவல் (Video)
நாட்டில் பல்வேறு குற்றச்செயல்கள் அதிகரித்த வண்ணமே உள்ளது. மர்மமான முறையில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மீட்கப்படுவது, கொலை மற்றும் பாரிய கொள்ளை சம்பவங்களில் ஈடுபடுவது, சிறுவர் துஷ்பிரயோகங்கள் என்பன அடங்குகின்றன.
இந் நிலையில் கடந்த ஞாயிற்க்கிழமை வீட்டில் உறக்கத்தில் உயிரிழந்தார் என பருத்தித்துறை வைத்தியசாலையில் சடலமாக ஒப்படைக்கப்பட்ட சிறுமி 2 மாத கர்ப்பிணி என உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் வீட்டில் இருப்பவர்களை தாக்கி பல கோடி பெறுமதியான நகைகள், பணம் என்பன திருடப்படும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றது.
மேலும் மது போதையில் உறங்கி கொண்டிருந்த தந்தையை தாக்கி மகன் ஒருவர் கொலை செய்துள்ளார்.
நாட்டில் மர்மமான முறையில் உயிழந்தவர்களின் சடலங்கள் உருக்குலைந்த நிலைகளில் மீட்கப்படுவதுடன், மரணத்திற்கான காரணங்கள் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை முன்னெடுக்கும் பல சம்பவங்கள் பதிவாகிவருகின்றன.
இவ்வாறு கடந்த வாரம் இடம்பெற்ற குற்றச் செயல்கள் அதனுடன் தொடர்புடைய விசாரணைகள், கைதுகள் தொடர்பான விரிவான தகவல்களை இக் காணொளியில் காணலாம்.



