29 வாரங்களாக நீடிக்கும் போராட்டம்: இராணுவ ஆக்கிரமிப்புக்கு எதிராக நீதிகோரி வீதியில் இறங்கிய யாழ். மக்கள்
வலி. வடக்கு பகுதிகளில் உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி, காணி உரிமையாளர்கள் இராணுவத்தினரின் "கொமோண்டோ " பங்களா முன்பாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த போராட்டமானது, இன்றுடன்(06.11.2026) 29ஆவது வாரமாக இடம்பெற்றுள்ளது.
வலி. வடக்கில் 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவை சேர்ந்த மக்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஜூன் மாத கால பகுதியில் அவர்களது சொந்த இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அந்த பகுதி உயர் பாதுகாப்பு வலயமாக காணப்படுகின்றது.
29வாரமாக தொடரும் போராட்டம்
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்த நிலையிலும், அப்பகுதிகளில் இருந்து பாதுகாப்பு தரப்பினர் வெளியேறாமல் ஆக்கிரமிப்பு செய்து வருவதால், அவை உயர்பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமது காணிகளை விடுவிக்குமாறு பல வருடங்களாக காணி உரிமையாளர்கள் போராடி வந்தும், காணிகள் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன.
தமது காணிகளை மீட்பதற்காக தொடர்ந்து காணி உரிமையாளர்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும் வேளையில், இன்றும்(06) 29ஆவது வாரமாக இடம்பெற்றுள்ளது.
