நாடு முழுவதும் எரிவாயு தட்டுப்பாடு - வர்த்தகர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கடும் எச்சரிக்கை
நாடு முழுவதும் எரிவாயு கையிருப்புகளை பதுக்கி வைக்கும் வர்த்தகர்களை கண்டறிவதற்காக நாடு தழுவிய ரீதியில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நுகர்வோர் விவகார அதிகாரசபையின் பணிப்பாளர் அசேல பண்டார இதனை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு
நாடு முழுவதும் தற்போது நிலவும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக கொழும்பு உட்பட பல மாவட்டங்களில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நுகர்வோருக்கு தேவையானவாறு எரிவாயு விநியோகிக்கப்படாமல், எரிவாயுக் கையிருப்புகளைப் பதுக்கி வைக்கும் வர்த்தகர்களைக் கண்டறிவதற்காக நாடு தழுவிய ரீதியிலான சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை நடத்தப்பட்ட சோதனையில் எரிவாயு கையிருப்புகளை பதுக்கி வைத்திருந்த குற்றச்சாட்டில் 100இற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.