யாழ்ப்பாணம் பேச்சியம்மாள் ஆலயத்தின் வேட்டைத் திருவிழா
யாழ்.அராலி மேற்கு வட்டுக்கோட்டை நீளத்திக்காடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் ஆலயத்தின் வேட்டைத் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
மூலஸ்தானத்தில் வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்றுள்ளன.
வேட்டைத் திருவிழா
அதனைத் தொடர்ந்து, வசந்த மண்டபத்தில் எழுந்தருளி வீற்றிருக்கும் பேச்சியம்மாளுக்கு விசேட பூஜைகள் நடைபெற்றுள்ளன.
பின்னர் பேச்சியம்மாள் மங்கல வாத்தியம் முழங்க, பக்தர்கள் புடைசூழ, குதிரை வாகனத்தில், மயிலாட்டம் , ஒயிலாட்டம், குதிரையாட்டம் என்பவற்றுடன் வலம்வந்து, அராலி மத்தி பேச்சியம்மாள் ஆலயத்தில் வேட்டையாடியுள்ளார்.
குறித்த கிரியைகளை துஷ்யந்தக் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்துள்ளதுடன் பல்வேறு பகுதிகளிலும் இருந்து வருகை தந்த பக்தர்கள் அம்பாளை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றுள்ளனர்.