சபாநாயகரின் அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துமாறு கோரிக்கை விடுப்பு
இலங்கையின் சபாநாயகர் அசோக சபுமல் ரன்வலவுடனான அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்துமாறு, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கோரிக்கை விடுத்துள்ளது.
பெரமுனவின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் கீதாநாத் காசிலிங்கம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அவரது கல்வித் தகுதிகள் தொடர்பான பிரச்சினைக்கு மத்தியிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
வெளிப்படையான மோசடி
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது.அவர் கலாநிதி என்ற தலைப்பை பயன்படுத்தியமை குறித்தும் கருத்துரைத்துள்ள கீதநாத், இந்த விடயம், அவரது நேர்மை மற்றும் பொறுப்புக்கூறல் குறித்து கேள்விகளை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், தனது தகுதிகளை தவறாகக் கூறிய சபாநாயகர் ஒருவர் இலங்கையில் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இந்த வெளிப்படையான மோசடிக்கு பொதுமக்கள் விளக்கத்திற்கு தகுதியானவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW | 
 
    
     
    
     
    
     
    
     
        
    
    இந்துமாகடல் அரசியலும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்
 
    
    சீனாவில் இருந்து அரிய பூமி கனிமங்களை இறக்குமதி செய்ய உரிமம் பெற்றுள்ள இந்திய நிறுவனங்கள் News Lankasri
 
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
     
 
 
 
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        