19 வருடங்களுக்கு பின்னர் பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட தண்டனை
வீடு ஒன்றுக்குள் புகுந்து, குடியிருப்பாளர்களை அச்சுறுத்தி, பொலிஸ் அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து சொத்துக்களை நாசம் செய்த நான்கு பொலிஸ் அதிகாரிகளுக்கு, 19 வருடங்களின் பின்னர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை நீதவான் லுஸாக குமாரி தர்மகீர்த்தி இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார்.
சுமத்தப்பட்ட 09 குற்றச்சாட்டுகள்
2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் கொஹொம்பகஸ்தலாவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசிப்பவர்களை அச்சுறுத்திய குற்றஞ்சாட்டப்பட்டவர்கள், பக்கியெல்ல பொலிஸ் அதிகாரிகளைப் போல் ஆள்மாறாட்டம் செய்து, சொத்துக்களுக்கு நாசம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்தநிலையில், பிரதிவாதிகள் மீது சுமத்தப்பட்ட 09 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட சந்தேக பேரில் மூவருக்கு ஆறு குற்றங்களுக்கு 1000 ரூபாயும், 3 குற்றங்களுக்கு 1500 ரூபாயும் அபராதமாக விதிக்கப்பட்டது.
நான்காவது குற்றவாளி ஏற்கனவே இறந்துவிட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |