தென் கொரியாவில் தொடரும் கொந்தளிப்பு: ஜனாதிபதி அலுவலகத்தில் சோதனை
தென் கொரியாவில் கடந்த வாரம் இராணுவச் சட்டத்தை நடைமுறைபடுத்திய, ஜனாதிபதி, யூன் சுக் யோலின் அலுவலகத்தை பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
எனினும், அதன்போது ஜனாதிபதி அங்கிருக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய அரசியலில் ஒரு கொந்தளிப்பு நிலவுகின்ற நிலையில், இந்த சோதனையும் இடம்பெற்றுள்ளது.
பதவிநீக்க வாக்கெடுப்பு மற்றும் பதவி விலக வேண்டும் என்று பலமுறை அழைப்பு விடுத்த போதிலும் பதவியில் இருந்த விலகுவதற்கு ஜனாதிபதி யூன் மறுத்துவருகிறார். இந்தநிலையில், அவர் மீது, கிளர்ச்சி மற்றும் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
பதவி விலகல்
இதற்கிடையில், இராணுவச் சட்டப் பிரகடனத்திற்குப் பொறுப்பேற்ற நிலையில், கைது செய்யப்பட்ட, நாட்டின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கிம் யோங்-ஹியூன், நேற்று இரவு காவலில் இருந்தபோது தவறான முடிவெடுக்க முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், அவர் குறித்த சம்பவத்தின்போது அதிகாரிகளால் காப்பாற்றப்பட்டுள்ளார். குறுகிய கால இராணுவச் சட்ட அறிவிப்பை அடுத்து யூனுக்கு நெருக்கமான பல அதிகாரிகளும் பதவி விலகியுள்ளனர்.
இந்த சூழ்நிலையில், ஜனாதிபதிக்கு என்ன அதிகாரங்கள் இருக்கின்றன என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை என்று பிபிசி கூறுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |