யாழ்.இளவாலையில் இடம்பெற்ற மோதலில் ஒருவா் பலி: இருவா் கைது
யாழ்.இளவாலையில் ஒரே கிராமத்தை சோ்ந்த இரு தரப்புக்கிடையே நடந்த தனிப்பட்ட மோதல் சம்பவத்தில் ஒருவா் உயிாிழந்துள்ளதுள்ள நிலையில், சம்பவத்துடன் தொடா்புடைய இருவா் கைது செய்யப்பட்டுள்ளனா்.
நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இச் சம்பவம் தொடா்பாக மேலும் தொியவருவதாவது, இளைவாலை - பொியவிளான் பகுதியில் வீதியால் வடை விற்பனை செய்யும் வண்டிலை இளைஞா்கள் சிலா் தள்ளிச் சென்றுள்ளனா்.
வாய்த்தா்க்கம் பின்னா் மோதல்
இதன்போது அதே பகுதியை சோ்ந்த மற்றொரு இளைஞா் குழு துவிச்சக்கர வண்டியில் அவ்வீதியால் வந்திருக்கின்றது.
இதன்போது இரு தரப்பிற்குமிடையே உருவான வாய்த்தா்க்கம் பின்னா் மோதலாக மாறியுள்ளது.
சம்பவத்தில் அதே கிராமத்தை சோ்ந்த புஸ்பராசா நிஷாந்தன் (வயது29) என்ற இளைஞன் படுகாயமடைந்த நிலையில் தெல்லிப்பழை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
வீடு திரும்பியவா் உயிரிழப்பு
எனினும் தனக்கு எதுவுமில்லை எனவும், தான் வைத்தியசாலையிலிருந்து சுயவிருப்பில் வெளியேறுவதாகவும் எழுதிக் கொடுத்துவிட்டு வீடு திரும்பியவா் வீட்டிற்கு சென்றதும் இரத்தமாக வாந்தி எடுத்துள்ளாா்.
பின்னா் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று உயிாிழந்துள்ளாா்.
தலையில் பலமாக தாக்கியதாலேயே அவா் உயிாிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த சம்பவத்துடன் தொடா்புடைய சந்தேகத்தில் 17 வயதான ஒருவரும், 25 வயதான ஒருவரும் இளவாலை பொலிஸாாினால் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இவா்களில் 17 வயதான நபரே மேற்படி தாக்குதல் மற்றும் கொலை சம்பவத்துடன் தொடா்புடைய பிரதான சந்தேகநபா் என பொலிஸாா் கூறியுள்ளனா்.
சம்பவம் தொடா்பாக மேலதிக விசாரணைகளை இளவாலை பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 24 நிமிடங்கள் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
