வடக்கின் கலாச்சார விழுமியங்கள் பலப்படுத்தப்படும்: ஜீவன் தியாகராஜா (Photos)
வடக்கிலுள்ள கலாச்சார விழுமியங்களை மத்திய கலாச்சார அமைச்சுடன் இணைந்து பலப்படுத்தப்படும் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் இல்லத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் உள்ள கலாச்சார விழுமியங்களை மத்திய கலாச்சார அமைச்சுடன் இணைந்து பாதுகாப்பதற்கு ஏதுவாக துறைசார்ந்த அதிகாரிகளுடன் கலந்துரையாடலை நடத்தினோம்.
வடக்கில் உள்ள அருங்காட்சியகத்தைப் புதுப்பித்தல், கலைப்பொருட்களின் பிரதிகளை புதுப்பித்தல், பாரம்பரிய கைவினைப் பொருட்களை மேம்படுத்துதல், தொல்லியல் மற்றும் இளைஞர்களின் ஆக்கங்களை தொடர்ச்சியாக ஆவணப்படுத்தப்படும்.
மேலும் யாழில் கையளிக்கப்படவுள்ள கலாச்சார மத்திய நிலையம் எமது மக்களுக்கு கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகக் கருதும் நிலையில் அதனூடாக எமது கலை கலாச்சார விழுமியங்களை வளர்க்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இக் கலந்துரையாடலில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன், மத்திய கலாச்சார திணைக்களப் பணிப்பாளர் நாயகம் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் நாயகம் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விஜய்யின் ஜனநாயகன் படத்தின் 2வது சிங்கிள் பாடல் எப்போது... வெளிவந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு Cineulagam