நல்லூரில் உற்சவ காலத்தில் கடமையாற்றிய பொலிஸார் மற்றும் சாரணர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு (Photos)
யாழ். நல்லூரில் உற்சவ காலத்தில் கடமையாற்றிய பொலிஸார் மற்றும் சாரணர்களுக்கு மதிப்பளிக்கும் நிகழ்வொன்று நல்லூர் ஆலய வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வானது இன்றைய தினம் (16.09.2023) இடம்பெற்றுள்ள நிலையில் உற்சவ காலத்தில் கடமையாற்றியவர்களுக்காக விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்று காளாஞ்சியும் கையளிக்கப்பட்டுள்ளது.

ஒத்துழைப்பு வழங்கியமை
வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் கடந்த மாதம் 21ம் திகதி ஆரம்பமாகிய நிலையில் இன்றுடன் (16.09.2023) நிறைவு பெறுகின்றது.
இந்த நிலையில் உற்சவ காலங்களில் பாதுகாப்பு கடமை மற்றும் வீதித் தடைகளில் கடமையாற்றி உற்சவ காலத்தில் பக்தர்கள் கந்தனை வழிபடுவதற்கு ஒத்துழைத்த பொலிஸார் மற்றும் சாரணர்களை மதிப்பளிக்கும் வகையிலான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர், யாழ். மாவட்ட சாரண சங்கத் தலைவர் பொலிஸ் உயரதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
