ஜோர்தானுக்கு வீட்டு தொழிலுக்காக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக புதிய காப்பீடு
ஜோர்தானிற்கு வீட்டு தொழிலுக்காக செல்லும் பெண்களின் பாதுகாப்புக்காக புதிய காப்பீடொன்றை அறிமுகப்படுத்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி குறித்த தொழிலுக்காக பெண் தொழிலாளியை இணைத்து கொள்ளும் சேவை வழங்குனரால் இந்த காப்பீடு கட்டாயமாக பெற்றுக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் வெளிநாட்டு தொழிலுக்காக குறித்த பெண், வெளிநாட்டு வெலைவாய்ப்பு பணியகத்தில் பதிவை பெற்றுக் கொள்வதற்காக குறித்த காப்பீட்டு சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.
பொருத்தமான காப்பீட்டை தெரிவு செய்யும் சந்தர்ப்பம்
அத்துடன் ஜோர்தான் நாட்டுக்கு வீட்டு வேலைகளுக்காக செல்லும் பெண்கள் இந்த காப்பீட்டை பெற்றுக் கொள்வது கட்டாயம் என்பதுடன் அதற்காக ஜோர்தான் அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கும் மூன்று காப்பீட்டு திட்டங்களில், அவர்களுக்கு பொருத்தமான காப்பீடொன்றை தெரிவு செய்து கொள்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொழில் ஒப்பந்த காலத்துக்குள் குறித்த தொழிலாளி மரணித்தால் அல்லது திடீர் விபத்து காரணமாக நிரந்தர பூரண ஊனமுற்ற நிலைமைக்கு ஆளானால் இதன் ஊடாக காப்பீட்டு நட்டஈடாக வழங்கப்படும்.
இதற்கு மேலதிகமாக வைத்திய சிகிச்சை பெற்றுக்கொள்ளல், சத்திரசிகிச்சை, கொவிட் போன்ற தொற்று நோய்களுக்காகவும் காப்பீட்டு நட்டஈடு உரித்தாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





யாழ்ப்பாணமே நீ குடிப்பது நல்ல தண்ணியா 2 நாட்கள் முன்

21 வயதில் முதல் முயற்சியிலேயே UPSC தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண்.., IAS பதவியை மறுத்த காரணம் News Lankasri
