யாழ். பல்கலை மாணவர்களின் போராட்டக்களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன்
யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த இரண்டு நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் போராட்டக் களத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளார்.
போரின் போது உயிரிழந்த பல்கலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களை நினைவுகூரும் பொருட்டு யாழ். பல்கலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி நேற்று முன்தினம் இரவு இடித்து அழிக்கப்பட்டது.
இதற்கு இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட தமிழ் மக்கள் வாழும் புலம்பெயர் நாடுகளிலிருந்து பல்வேறு அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பலரும் எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் குறித்த நினைவுத்தூபி இடித்தழிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு நாட்களாக பல்கலை வளாகத்தில் உண்ணாவிரத போராட்டம் மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்.




கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri