யாழில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
யாழ்ப்பாணம் (Jaffna) - அளவெட்டிப் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து சம்பவமானது நேற்று (20.05.2024) மாலை இடம்பெற்றுள்ளது.
விபத்தில், அளவெட்டி பகுதியை சேர்ந்த 36 வயதுடைய வீரசிங்கம் தயானந்தன் என்பவரே உயிரிழந்தாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸ் விசாரணை
அளவெட்டி வடக்கு செட்டிச்சோலைப் பகுதியில் நேற்று (20) மாலை வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்றவர் படுகாயமடைந்து தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Siragadikka Aasai: முத்துவின் சட்டையைப் பிடித்து அடித்த ரவி... அண்ணன் தம்பிக்குள் ஏற்பட்ட விரிசல் Manithan
வீட்டில் ஆயிரம் பிரச்சனை, ஆனால் ரொமான்ஸ் Moodல் கதிர்- ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ரொமான்டிக் புரொமோ Cineulagam