கொழும்பில் உலக வங்கி ஏற்பாடு செய்யும் கலந்துரையாடல்: அமைச்சர் கஞ்சனவின் அறிவிப்பு
மே 29ஆம் திகதி கொழும்பில் உலக வங்கியானது முன்னேற்ற ஆற்றல் மாற்றம் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடலை ஏற்பாடு செய்யும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர (Kanchana Wijesekera) அறிவித்துள்ளார்.
டுவிட்டர் பதிவொன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 29ஆம் திகதி கொழும்பில் உலக வங்கியானது முன்னேற்ற ஆற்றல் மாற்றம் தொடர்பான வட்டமேசை கலந்துரையாடலை ஏற்பாடு செய்யும். இந்த நிலையில் நிகழ்வு பற்றிய ஆரம்ப கலந்துரையாடல் கடந்த வாரம் உலக வங்கி குழுவுடன் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
திட்டத்தில் கவனம் செலுத்தப்படும் விடயம்
"புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடுகளை ஈர்ப்பது, ஆற்றல் மாற்றத்தை விரைவுபடுத்துதல், பசுமை ஹைட்ரஜன் திட்டங்கள் மற்றும் தனியார் முதலீடுகளை அதிகரிப்பது ஆகியவற்றில் இந்த திட்டம் கவனம் செலுத்தும்" என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த நிகழ்வில் அபிவிருத்தி முகவர் நிலையங்கள், தொழில்துறை பங்குதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின் அதிகாரிகளின் ஆற்றல் மற்றும் நிதி நிபுணர்கள் பங்குபற்றுவார்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
World Bank will be organizing a Roundtable on Advancing Energy Transition on the 29th of May in Colombo. The preliminary discussion on the event was held with the World Bank team at the Ministry of Power & Energy last week.
— Kanchana Wijesekera (@kanchana_wij) May 19, 2024
The program will focus on attracting investments in… pic.twitter.com/UukcZhszV7