சர்வதேச விசாரணைக்கான சாட்சியங்கள் நாளுக்கு நாள் மரணிக்கின்றன: மேரி பற்றிமா புஷ்பராணிக்கு இரங்கல்
நேற்றைய தினம் மரணமடைந்த
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்பின் வடமராட்சிக்கிழக்கு
ஒருங்கிணைப்பாளரான அருளானந்தம் மேரி பற்றிமா புஷ்பராணிக்கு வலிந்து
காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்பினர் தமது இரங்கல் செய்தியை
வெளியிட்டுள்ளது.
அந்த செய்தி குறிப்பில் மேலும், வடமராட்சி கிழக்கு தாளையடி வடக்கை சேர்ந்த அருளானந்தம் மேரி பற்றிமா என்பவரே சுகயீனம் காரணமாக நேற்று மரணமடைந்துள்ளார். இவரது ஒரு மகன் மாவீரர், மற்றொரு மகன் வலிந்து காணாமல் ஆக்கப்படுள்ளார்.
சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்திய மேரி பற்றிமா புஷ்பராணி
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இவரது மகன் அருளானந்தம் ஜோன்ஷன் இதயதாஸ் கடந்த
2009ம் ஆண்டு சிங்கள அரச படைகளால் முள்ளிவாக்காலில் வைத்து கடத்தப்பட்டு
காணாமல் ஆக்கப்பட்டார். கடைசிவரை காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனை காணமுடியாத நிலையில் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார்.
இவர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை கண்டறிய சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தி கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை வட கிழக்கில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு வந்துள்ளார்.
நீதியை வேண்டிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தாயார்,தந்தையர்கள் சகோதரர்கள் தங்கள் உறவுகளை காண முடியாமல் வடக்கு,கிழக்கில் மட்டும் இதுவரை சுமார் 322 உறவினர்கள் மரணமடைந்துள்ள நிலையில் குறித்த தாயாரும் நேற்றைய தினம் மரணமடைந்துள்ளார்.
இவரின் இழப்பு அவரது குடும்பத்தாருக்கும்,வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட ஈழத்தமிழர் உறவினர் அமைப்புக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
சர்வதேச விசாரணைக்கான சாட்சியங்கள் நாளுக்கு நாள் மரணிக்கின்றன. இந்த நிலையில் நாம் பரந்துபட்ட போராட்ட வெளிகளை உருவாக்க வேண்டும். அதன் ஊடாகவே சர்வதேச விசாரணையை நிலை நாட்ட முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மரணம் |