யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் மரணம்
யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்கத்தின் முன்னாள் தலைவர்
மேரி பற்றிமா புஸ்பராணி உயிரிழந்துள்ளார்.
இன்று அதிகாலை இவர் மாரடைப்பு ஏற்பட்டு சாவகச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.
மேரி பற்றிமா புஸ்பராணியின் குடும்ப பின்னணி
வடமராட்சி கிழக்கு தாளையடியைச் சேர்ந்த இவர் வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை தேடி அறிவதற்கான போராட்டத்தை கடந்த 2015 ஆம் ஆண்டு ஆரம்பித்தவராவார்.
யுத்தத்தில் இவர் ஒரு மகனை இழந்துள்ளதோடு, இவரின் இன்னொரு மகன் காணாமல் ஆக்கப்பட்டுள்ளார்.
கடந்த 13 ஆண்டுகளாக காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளார்.
தமது பிள்ளைகளை தேடி பல ஆண்டுகளாக அலைந்து திரிந்த நிலையில் பல பெற்றோர் மரணமடைந்துள்ளனர்.
இந்தநிலையிலே மேரி பற்றிமா புஷ்பராணியும் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 2 நாட்கள் முன்

குணசேகரன் குறித்து சாமியார் கூறிய உண்மை, அடிக்கச்சென்ற கதிர்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வழுக்கி விழுந்த தமிழ், பதறி அடித்து ஓடிய சேது... சின்ன மருமகள் பரபரப்பு புரொமோ Cineulagam

அய்யனார் துணை சீரியல் நடிகர் சோழனுக்கு நிஜ வாழ்க்கையில் இப்படியொரு சோகமா?... கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam
