யாழில் அதிகரித்துள்ள வங்கி மோசடிகள்: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
யாழ்ப்பாணத்தில் (Jaffna) தற்போது வங்கி மோசடிகள் அதிகரித்து வருவதால் வர்த்தகர்களும்,பொதுமக்களும் மிகவும் அவதானமாக செயற்பட வேண்டுமென யாழ். வணிகர் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக யாழ். வணிகர் கழகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
"யாழ்.நகர வணிகர்கள் மற்றும் பொது மக்களின் தொலைபேசிக்கு அநாவசியமாக அழைப்புக்கள் மூலம் (ரெலிகொம்) வங்கி இலக்கத்திற்கு பரிசு அனுப்புவதாக கூறி வங்கி இலக்கத்தையும் கைத்தொலைபேசிக்கு வரும் OTP (one time password -ஒரு தடவை மட்டும் பாவிக்கும் கடவுச்சொல்) கேட்கிறார்கள்.
தொலைபேசி அழைப்பு
அதனை (6 இலக்கங்கள் கொண்டது) வழங்கியதுடன் வங்கிக்கணக்கிலுள்ள பணம் கள்வர்களால் களவாடப்படுகிறது. நம்பும்படி பேசி இந்த மோசடி செய்யப்படுகிறது.
குறுகிய காலப்பகுதிக்குள் அதிகளவிலான மோசடிகள் நடைபெற்றுள்ளதாக வங்கி முகாமையாளர்களால் எமக்கு அறியத்தரப்பட்டுள்ளது.
எனவே, அனைவரும் மிகவும் அவதானமாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

11 துப்பாக்கிகள், 40 கத்திகள்.,100 பேர் கைது! பிரித்தானிய பொலிஸாரின் முன்னெச்சரிக்கை எதற்காக? News Lankasri

சூப்பர் சிங்கர் போட்டியாளருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய் ஆண்டனி... சந்தோஷத்தில் போட்டியாளர், வீடியோ Cineulagam
