ஆயுத போராட்டத்திற்கு முன்னர் மக்கள் யாரிடமும் கஞ்சிக்காக கையேந்தவில்லை : டக்ளஸ் சுட்டிக்காட்டு

Jaffna Douglas Devananda Sri Lanka
By Kajinthan May 21, 2024 12:38 PM GMT
Report

அனுபவங்களிலிருந்து பாடம் கற்கவில்லை என்றால் கடந்து போனவைகளையே காலம் திருப்பித் தரும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா (Douglas devananda)  தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் யாழ்ப்பாண(Jaffna)  அலுவலகத்தில் இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய சாலையின் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.

இதன்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நண்பனுடன் சேர்ந்த இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

நண்பனுடன் சேர்ந்த இளம் மனைவியை கொடூரமாக கொலை செய்த கணவன்

ஆயுதப் போராட்டம்

அவர் மேலும் கூறுகையில்,

“ஆயுதப் போராட்டம் முன்னெடுக்க முன்னர் மக்கள் யாரிடமும் கஞ்சிக்காக மட்டுமல்ல எந்தவொரு தேவைக்கும் கையேந்தியிருக்கவில்லை. 

ஆனால் 1987 ஆம் ஆண்டுகளின் பின்னரான திசைவழிமாறிய ஆயுதப் போராட்டமே இவ்வாறான நிலைக்கு தமிழ் மக்களை தள்ளியுள்ளது. இது மறுக்க முடியாத வரலாற்று உண்மை.

ஆயுத போராட்டத்திற்கு முன்னர் மக்கள் யாரிடமும் கஞ்சிக்காக கையேந்தவில்லை : டக்ளஸ் சுட்டிக்காட்டு | Jaffna Meetup Douglas

எனினும், இவ்வாறான நிலைக்கு மக்கள் வந்துள்ளது மனதுக்கு வேதனையானாக உள்ளது.

ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த ஆரம்பகால போராளிகளுள் நானும் ஒருவன் என்ற வகையில் இதற்கு தார்மீக பொறுப்பை நானும் ஏற்றுத்தான் ஆகவேண்டும்.

ஒரு காலத்தில் ஆயுதப் போராட்டத்தின் தேவை இருந்தது. இருப்பினும் அந்தக் களச்சூழல் சர்வதேசத்தின் பார்வைகளை வைத்து அதிலிருந்து விடுபட்டு மாற்று பொறிமுறைக்கு செல்லவேண்டியிருந்ததும் அவசியமாக இருந்தது.

ஆனால் 1987 இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் ஆயுத வழியிலான போராட்டம் எமது மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கு சாத்தியமாகாதொன்று அல்ல என்று வெளிப்படையாக எடுத்துக் கூறியது.

ஆயுத போராட்டத்திற்கு முன்னர் மக்கள் யாரிடமும் கஞ்சிக்காக கையேந்தவில்லை : டக்ளஸ் சுட்டிக்காட்டு | Jaffna Meetup Douglas

அதனால் நாம் நாடாளுமன்ற ஜனநாயக வழியில் எமது அடுத்த கட்ட நகர்வுகளை மேற்கொள்ள காலடி எடுத்து வைத்திருந்தோம். அதில் வெற்றியும் கண்டுள்ளோம்.

இதேநேரம் ஆயுதப் போராட்டம் சாத்தியமற்றதென்று தெரிந்தும் தமது நலன்களுக்காக ஆயுதப் போராட்டம்தான் சாத்தியம் என்று கூறி மக்களை தவறாக அல்லது வலுக்கட்டாயமாக இழுத்து அழிவு பாதைக்கு கொண்டு சென்று தற்போது மக்களை இத்தகைய நிலைக்கு கொண்டுவந்துவிட்ட தரப்பினரை ஒருபோதும் மன்னிக்க முடியாது.

தமிழ் மக்கள்

அதே நேரம் பிரபாகரன் யுத்தத்தை ஒருபோதும் தானாக விரும்பி கைவிடவில்லை. மாறாக எல்லாமே முடிவுக்கு வரவேண்டிய கட்டாய சூழலில் யுத்தமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. 

ஆயுத போராட்டத்திற்கு முன்னர் மக்கள் யாரிடமும் கஞ்சிக்காக கையேந்தவில்லை : டக்ளஸ் சுட்டிக்காட்டு | Jaffna Meetup Douglas

இதன் காரணமாக விடுதலைப் புலிகளின் அமைப்பின் வழிமுறை தோற்றுப்போனது உண்மையே. அதற்காக தமிழ் மக்கள் தோற்றுப்போனதாக அர்த்தப்படாது. தமிழ் மக்கள் ஒருபோதும் தோற்றுப் போகவும் இல்லை தோற்றுவிடவும் மாட்டார்கள்.

அந்தவகையில் தமிழ் அரசியல் தரப்பினர் கடந்தகால வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளாத வரை வரலாறு அதை மீண்டும் மீண்டும் அரங்கேற்றிக்கொண்டுதான் இருக்கும்.

அதன் அடிப்படையில் நிலையான சமாதானம் மற்றும் தமிழ் மக்களின் முன்னேற்றத்திற்கான பன்முகத்தன்மையை உள்ளடக்கிய வளமான எதிர்காலத்தை நோக்கிய பயணத்துக்கு தமிழ் தரப்பினர் அர்ப்பணிப்புடன் உழைக்க முன்வரவேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்பும் சிறையில் அடைக்கப்படும் முன்னாள் போராளிகள்!

புனர்வாழ்வளிக்கப்பட்ட பின்பும் சிறையில் அடைக்கப்படும் முன்னாள் போராளிகள்!

பாடசாலைகளுக்கு விடுமுறை! மறுக்கும் கல்வி அமைச்சு

பாடசாலைகளுக்கு விடுமுறை! மறுக்கும் கல்வி அமைச்சு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US